பல்வேறு வகையான போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலை தரிசிக்க வந்த 14 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் ரயில் நிலையம் உட்பட சிவனொளிபாத மலைக்கு செல்லும் வீதிகளில் மேற்கொண்ட சோதனையின் போதே குறித்த 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொழும்பு உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் 25-35 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேக நபர்களை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பமாகிய நாள் முதல் இன்று வரை ஹெரோயின், ஐஸ், குஷ் மற்றும் சட்டவிரோத சிகரெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்களை எடுத்துச் சென்ற 393 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலை யாத்திரை சென்ற 393 பேர் கைது பல்வேறு வகையான போதைப்பொருட்களுடன் சிவனொளிபாதமலை தரிசிக்க வந்த 14 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் ரயில் நிலையம் உட்பட சிவனொளிபாத மலைக்கு செல்லும் வீதிகளில் மேற்கொண்ட சோதனையின் போதே குறித்த 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொழும்பு உட்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் 25-35 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர்களை ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும், சிவனொளிபாதமலை பருவகாலம் ஆரம்பமாகிய நாள் முதல் இன்று வரை ஹெரோயின், ஐஸ், குஷ் மற்றும் சட்டவிரோத சிகரெட்டுகள் உள்ளிட்ட பல்வேறு போதைப் பொருட்களை எடுத்துச் சென்ற 393 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு, ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.