• Mar 13 2025

விசர் நாய்க்கடி - சம்மாந்துறையில் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம்

Chithra / Mar 13th 2025, 2:10 pm
image



சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட செந்நெல் கிராம பகுதியில் 7 பேரை கட்டாக்காலி நாய் கடித்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது.

இதற்கமைய உடன் செயற்பட்ட  பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குழுவினர் வைத்தியசாலைக்குச் சென்று பாதிக்கப்பட்ட நோயாளிகளை விசாரித்துவிட்டு சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்றதுடன்,

அப்பிரதேச இளைஞர்களால் கொல்லப்பட்ட நாயின் தலையை மீட்டு  மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் இன்று(13)  அப் பிரதேசத்திலுள்ள கட்டாக்காலி நாய்களுக்கு தடுப்பூசி வழங்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளடன் பொதுமக்கள் விசர் நாய் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு  சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வேண்டுகொள் விடுத்துள்ளார்.


விசர் நாய்க்கடி - சம்மாந்துறையில் தடுப்பூசி வழங்கும் வேலைத்திட்டம் சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிற்குட்பட்ட செந்நெல் கிராம பகுதியில் 7 பேரை கட்டாக்காலி நாய் கடித்த சம்பவம் நேற்று பதிவாகியுள்ளது.இதற்கமைய உடன் செயற்பட்ட  பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குழுவினர் வைத்தியசாலைக்குச் சென்று பாதிக்கப்பட்ட நோயாளிகளை விசாரித்துவிட்டு சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு சென்றதுடன்,அப்பிரதேச இளைஞர்களால் கொல்லப்பட்ட நாயின் தலையை மீட்டு  மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் இன்று(13)  அப் பிரதேசத்திலுள்ள கட்டாக்காலி நாய்களுக்கு தடுப்பூசி வழங்கும் நிகழ்வும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளடன் பொதுமக்கள் விசர் நாய் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு  சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி வேண்டுகொள் விடுத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement