நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் உதய ஹேரத் தெரிவித்துள்ளார்.
சீரற்ற வானிலையால் 18 மாவட்டங்களில் உள்ள 141 பிராந்திய செயலகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
நாடளாவிய ரீதியில் 66,947 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 7 ஆயிரத்து 582 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் உதய ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.
வடமேல் மாகாணத்தில் 1,893 குடும்பங்களைச் சேர்ந்த 6,615 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சப்ரகமுவ மாகாணத்தில் 51 குடும்பங்களைச் சேர்ந்த 193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வட மாகாணத்தில் 17 ஆயிரத்து 922 குடும்பங்களைச் சேர்ந்த 62 ஆயிரத்து 505 பேரும் கிழக்கு மாகாணத்தில் 36ஆயிரத்து 811 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 29 ஆயிரத்து 531 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தென் மாகாணத்தில் 222 குடும்பங்களைச் சேர்ந்த 835 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மத்திய மாகாணத்தில் 150 குடும்பங்களைச் சேர்ந்த 546 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், ஊவா மாகாணத்தில் 477 குடும்பங்களைச் சேர்ந்த 1,861 பேரும், வடமத்திய மாகாணத்தில் 1,730 குடும்பங்களைச் சேர்ந்த 5,451 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கனமழையால் கணிசமான சேதம் ஏற்பட்டுள்ளதுடன், ஆறு வீடுகள் முழுமையாகவும், 561 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக, 3,102 குடும்பங்களைச் சேர்ந்த 10ஆயிரத்து 137 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சீரற்ற வானிலையால் 4 பேர் பலி - இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு நாட்டில் நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக இதுவரை 4 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 6 பேர் காணாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் உதய ஹேரத் தெரிவித்துள்ளார்.சீரற்ற வானிலையால் 18 மாவட்டங்களில் உள்ள 141 பிராந்திய செயலகங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.நாடளாவிய ரீதியில் 66,947 குடும்பங்களைச் சேர்ந்த 2 இலட்சத்து 7 ஆயிரத்து 582 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் உதய ஹேரத் மேலும் தெரிவித்துள்ளார்.வடமேல் மாகாணத்தில் 1,893 குடும்பங்களைச் சேர்ந்த 6,615 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சப்ரகமுவ மாகாணத்தில் 51 குடும்பங்களைச் சேர்ந்த 193 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.வட மாகாணத்தில் 17 ஆயிரத்து 922 குடும்பங்களைச் சேர்ந்த 62 ஆயிரத்து 505 பேரும் கிழக்கு மாகாணத்தில் 36ஆயிரத்து 811 குடும்பங்களைச் சேர்ந்த ஒரு இலட்சத்து 29 ஆயிரத்து 531 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.தென் மாகாணத்தில் 222 குடும்பங்களைச் சேர்ந்த 835 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், மத்திய மாகாணத்தில் 150 குடும்பங்களைச் சேர்ந்த 546 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், ஊவா மாகாணத்தில் 477 குடும்பங்களைச் சேர்ந்த 1,861 பேரும், வடமத்திய மாகாணத்தில் 1,730 குடும்பங்களைச் சேர்ந்த 5,451 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.கனமழையால் கணிசமான சேதம் ஏற்பட்டுள்ளதுடன், ஆறு வீடுகள் முழுமையாகவும், 561 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.பாதிக்கப்பட்டவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக, 3,102 குடும்பங்களைச் சேர்ந்த 10ஆயிரத்து 137 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.