மண்சரிவு அபாயம் காரணமாக கொஸ்லாந்தை - கெலிப்பனாவல பகுதியிலிருந்து மேலும் 41 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
இதற்கு முன்னரும் மண்சரிவு அறிகுறிகள் தென்பட்ட போது 31 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், கெலிப்பனாவல பிரதேசத்தில் இருந்து இதுவரையில் 279 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
இதேவேளை தெனியாய - இரத்தினபுரி பிரதான வீதியின் 85 ஆவது மைல்கல் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக குறித்த வீதியுடனான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் முக்கிய பகுதியில் மண்சரிவு அபாயம் - மேலும் 41 குடும்பங்கள் இடம்பெயர்வு. மண்சரிவு அபாயம் காரணமாக கொஸ்லாந்தை - கெலிப்பனாவல பகுதியிலிருந்து மேலும் 41 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.இதற்கு முன்னரும் மண்சரிவு அறிகுறிகள் தென்பட்ட போது 31 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், கெலிப்பனாவல பிரதேசத்தில் இருந்து இதுவரையில் 279 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுஇதேவேளை தெனியாய - இரத்தினபுரி பிரதான வீதியின் 85 ஆவது மைல்கல் பகுதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக குறித்த வீதியுடனான போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.