முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையத்தின் இறுதிக்கட்டப்பணிக்கு நகர அபிருத்தி அதிகார சபையினால் ரூபா 42 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது .
முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலைய முதற்கட்ட கட்டுமானப் பணிகள் 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது எனினும் நாட்டின் பொருளாதார நிலைமை காரணமாக தடைப்பட்டிருந்த 2ம் கட்டப் பணிகள் 2024 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்நிலையில் இறுதிக்கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு அடுத்த வருட நடுப்பகுதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது
முல்லைத்தீவு மாவட்ட வெள்ள அனர்த்த பாதிப்புக்கள் தொடர்பான நிலைமைகளை பார்வையிடுவதற்காக களவிஜயம் மேற்கொண்ட நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஏரங்க குணசேகர முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையத்தை பார்வையிட்டார்.
இதன் போது முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய மேலதிக பணிகள் தொடர்பாக மாவட்ட அரச அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்களால் பிரதி அமைச்சரிற்கு விவரிக்கப்பட்டது.
இக் களவிஜயத்தின் போது வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செ.திலகநாதன் , துரைராசா ரவிகரன் மற்றும் நகர அபிருத்தி அதிகார சபை பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையத்தின் இறுதிக்கட்டப்பணிக்கு 42 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையத்தின் இறுதிக்கட்டப்பணிக்கு நகர அபிருத்தி அதிகார சபையினால் ரூபா 42 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது . முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலைய முதற்கட்ட கட்டுமானப் பணிகள் 2018 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது எனினும் நாட்டின் பொருளாதார நிலைமை காரணமாக தடைப்பட்டிருந்த 2ம் கட்டப் பணிகள் 2024 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இந்நிலையில் இறுதிக்கட்டப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு அடுத்த வருட நடுப்பகுதியில் நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றதுமுல்லைத்தீவு மாவட்ட வெள்ள அனர்த்த பாதிப்புக்கள் தொடர்பான நிலைமைகளை பார்வையிடுவதற்காக களவிஜயம் மேற்கொண்ட நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஏரங்க குணசேகர முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையத்தை பார்வையிட்டார். இதன் போது முல்லைத்தீவு மத்திய பேருந்து நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய மேலதிக பணிகள் தொடர்பாக மாவட்ட அரச அதிபர் அ.உமாமகேஸ்வரன் அவர்களால் பிரதி அமைச்சரிற்கு விவரிக்கப்பட்டது. இக் களவிஜயத்தின் போது வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான செ.திலகநாதன் , துரைராசா ரவிகரன் மற்றும் நகர அபிருத்தி அதிகார சபை பணிப்பாளர் மற்றும் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.