• Nov 26 2024

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 45ஆயிரம் பேர் பாதிப்பு...! திடீர் வெள்ளத்தால் திணறிய மக்கள்...!

Sharmi / May 27th 2024, 2:46 pm
image

இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 11949 குடும்பங்களை சேர்ந்த 44627 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தால் இன்று(27)  வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன் நுவரெலியா, புத்தளம் ,காலி, இரத்தினபுரி ,ஆகிய மாவட்டங்களை சேர்ந்த  7 பேர் சீரற்ற காலநிலை காரணமாக  உயிரிழந்துள்ளதுடன் 15பேர் காயமடைந்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

அந்த வகையில் கனமழை, மின்னல், திடீர் வெள்ளப்பெருக்கு,சுழல்காற்று,மண்சரிவு மற்றும் மரங்கள் சரிவு போன்ற அனர்த்தங்களால் நாட்டில் பல பாகங்களிலும் மக்கள் பாதிப்படைந்துள்ளதுடன் உடமைகளும் சேதமடைந்துள்ளன.

சப்ரகமுவ மாகாணம் இரத்தினபுரி மாவட்டத்தில் 610 குடும்பங்களை சேர்ந்த 2287 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  569 வீடுகள் பகுதியளவிலும் 5 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.  ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார் 

கேகாலை மாவட்டத்தில் 42 குடும்பங்களை சேர்ந்த 163 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 42 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன

வடமாகாணம் கிளிநொச்சி மாவட்டத்தில் 436 குடும்பங்களை சேர்ந்த 959 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 வீடுகள் பகுதியளவில் சேதடைந்துள்ளன.

யாழ் மாவட்டத்தில் 7 குடும்பங்களை சேர்ந்த 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 6 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 குடும்பங்களை சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

மேல் மாகாணம் களுத்துறை மாவட்டத்தில் 647 குடும்பங்களை சேர்ந்த 2291 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 537 வீடுகள் பகுதியளவிலும் 4 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.

கம்பஹா மாவட்டத்தில் 5,911 குடும்பங்களை சேர்ந்த 23,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 455 வீடுகள் பகுதியளவிலும் 1 வீடு முழுமையாகவும் சேதடைந்துள்ளன

கொழும்பு மாவட்டத்தில் 312 குடும்பங்களை சேர்ந்த 1141பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 1141பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

தென் மாகாணம் காலி மாவட்டத்தில் 812 குடும்பங்களை சேர்ந்த 2652 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 788 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் 1 வீடு முழுமையாக சேதமடைந்துள்ளது

மாத்தறை மாவட்டத்தில் 479 குடும்பங்களை சேர்ந்த 1792 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 457 வீடுகள் பகுதியளவிலும் 2 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.

ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 33 குடும்பங்களை சேர்ந்த 116 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 32 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது

வடமேல் மாகாணம் புத்தளம் மாவட்டத்தில் 2184 குடும்பங்களை சேர்ந்த 7315பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 103 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது 207 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் 3 பேர் உயிரிழந்துள்ளதோடு 5பேர் காயமடைந்துள்ளனர்

குருனாகல் மாவட்டத்தில் 47 குடும்பங்களை சேர்ந்த 158 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 36 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது

மத்தியமாகாணம் கண்டி மாவட்டத்தில் 272 குடும்பங்களை சேர்ந்த 1249 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 253 வீடுகள் பகுதியளவிலும் 2 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன 51 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

நுவரெலியா மாவட்டத்தில் 86 குடும்பங்களை சேர்ந்த 342 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 84 வீடுகள் பகுதியளவில் சேதடைந்துள்ளன

வடமத்தியமாகாணம் அநுராதபுரம் மாவட்டத்தில் 15 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 8 வீடுகள் பகுதியளவில் சேதடைந்துள்ளன 

பொலன்னறுவை மாவட்டத்தில் 26 குடும்பங்களை சேர்ந்த 91 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 19 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன

ஊவா மாகாணம் பதுளை மாவட்டதில் 27 குடும்பங்களை சேர்ந்த 100பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 21 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 2வர் காயமடைந்துள்ளனர்

கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தில் 1குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 1 வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 45ஆயிரம் பேர் பாதிப்பு. திடீர் வெள்ளத்தால் திணறிய மக்கள். இலங்கையில் தொடரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 11949 குடும்பங்களை சேர்ந்த 44627 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையத்தால் இன்று(27)  வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.அத்துடன் நுவரெலியா, புத்தளம் ,காலி, இரத்தினபுரி ,ஆகிய மாவட்டங்களை சேர்ந்த  7 பேர் சீரற்ற காலநிலை காரணமாக  உயிரிழந்துள்ளதுடன் 15பேர் காயமடைந்துள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதுஅந்த வகையில் கனமழை, மின்னல், திடீர் வெள்ளப்பெருக்கு,சுழல்காற்று,மண்சரிவு மற்றும் மரங்கள் சரிவு போன்ற அனர்த்தங்களால் நாட்டில் பல பாகங்களிலும் மக்கள் பாதிப்படைந்துள்ளதுடன் உடமைகளும் சேதமடைந்துள்ளன.சப்ரகமுவ மாகாணம் இரத்தினபுரி மாவட்டத்தில் 610 குடும்பங்களை சேர்ந்த 2287 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  569 வீடுகள் பகுதியளவிலும் 5 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.  ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார் கேகாலை மாவட்டத்தில் 42 குடும்பங்களை சேர்ந்த 163 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 42 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளனவடமாகாணம் கிளிநொச்சி மாவட்டத்தில் 436 குடும்பங்களை சேர்ந்த 959 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 4 வீடுகள் பகுதியளவில் சேதடைந்துள்ளன.யாழ் மாவட்டத்தில் 7 குடும்பங்களை சேர்ந்த 19 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 6 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 குடும்பங்களை சேர்ந்த 10 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 2 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.மேல் மாகாணம் களுத்துறை மாவட்டத்தில் 647 குடும்பங்களை சேர்ந்த 2291 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 537 வீடுகள் பகுதியளவிலும் 4 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.கம்பஹா மாவட்டத்தில் 5,911 குடும்பங்களை சேர்ந்த 23,888 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 455 வீடுகள் பகுதியளவிலும் 1 வீடு முழுமையாகவும் சேதடைந்துள்ளனகொழும்பு மாவட்டத்தில் 312 குடும்பங்களை சேர்ந்த 1141பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 1141பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்தென் மாகாணம் காலி மாவட்டத்தில் 812 குடும்பங்களை சேர்ந்த 2652 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 788 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் 1 வீடு முழுமையாக சேதமடைந்துள்ளதுமாத்தறை மாவட்டத்தில் 479 குடும்பங்களை சேர்ந்த 1792 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 457 வீடுகள் பகுதியளவிலும் 2 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன.ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 33 குடும்பங்களை சேர்ந்த 116 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 32 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுவடமேல் மாகாணம் புத்தளம் மாவட்டத்தில் 2184 குடும்பங்களை சேர்ந்த 7315பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 103 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது 207 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் 3 பேர் உயிரிழந்துள்ளதோடு 5பேர் காயமடைந்துள்ளனர்குருனாகல் மாவட்டத்தில் 47 குடும்பங்களை சேர்ந்த 158 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 36 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுமத்தியமாகாணம் கண்டி மாவட்டத்தில் 272 குடும்பங்களை சேர்ந்த 1249 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 253 வீடுகள் பகுதியளவிலும் 2 வீடுகள் முழுமையாகவும் சேதமடைந்துள்ளன 51 பேர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்நுவரெலியா மாவட்டத்தில் 86 குடும்பங்களை சேர்ந்த 342 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 84 வீடுகள் பகுதியளவில் சேதடைந்துள்ளனவடமத்தியமாகாணம் அநுராதபுரம் மாவட்டத்தில் 15 குடும்பங்களை சேர்ந்த 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 8 வீடுகள் பகுதியளவில் சேதடைந்துள்ளன பொலன்னறுவை மாவட்டத்தில் 26 குடும்பங்களை சேர்ந்த 91 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 19 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளனஊவா மாகாணம் பதுளை மாவட்டதில் 27 குடும்பங்களை சேர்ந்த 100பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 21 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 2வர் காயமடைந்துள்ளனர்கிழக்கு மாகாணம் திருகோணமலை மாவட்டத்தில் 1குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் 1 வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement