• Sep 21 2024

மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 48 வெளிநாட்டவர்கள் கைது

Chithra / Dec 18th 2022, 3:04 pm
image

Advertisement

மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள டெங்கில் பகுதியில் குடிவரவுத் துறையும் தேசிய பதிவுத் துறையும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமாக தங்கியிருந்த 48 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

மலேசிய குடிவரவுத்துறை இயக்குநர் ஜெனரல் கைரூல் டஸ்மி தவுத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், டிசம்பர் 17ம் தேதி அதிகாலை நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 63 வெளிநாட்டவர்கள் சோதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. 

இதில் 48 வெளிநாட்டவர்கள் விசா காலம் முடிந்தும் மற்றும் முறையான தனிநபர் அடையாளச் சான்றுகளின்றியும் தங்கியிருந்தது தெரிய வந்திருக்கிறது. 

இந்த சோதனையின் மீது சிலர் தப்ப முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதில் கைது செய்யப்பட்டவர்களில் 30 பேர் இந்தோனேசியர்கள், 12 பேர் வங்கதேசிகள், 5 பேர் மியான்மரிகள், மற்றும் ஒருவர் வியாட்நாமியர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இவர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக Lenggeng குடிவரவுத்தடுப்பு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 

மலேசியாவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 48 வெளிநாட்டவர்கள் கைது மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள டெங்கில் பகுதியில் குடிவரவுத் துறையும் தேசிய பதிவுத் துறையும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில், சட்டவிரோதமாக தங்கியிருந்த 48 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மலேசிய குடிவரவுத்துறை இயக்குநர் ஜெனரல் கைரூல் டஸ்மி தவுத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், டிசம்பர் 17ம் தேதி அதிகாலை நடத்தப்பட்ட தேடுதல் நடவடிக்கையில் 63 வெளிநாட்டவர்கள் சோதிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இதில் 48 வெளிநாட்டவர்கள் விசா காலம் முடிந்தும் மற்றும் முறையான தனிநபர் அடையாளச் சான்றுகளின்றியும் தங்கியிருந்தது தெரிய வந்திருக்கிறது. இந்த சோதனையின் மீது சிலர் தப்ப முயன்றதாகவும் கூறப்படுகிறது. இதில் கைது செய்யப்பட்டவர்களில் 30 பேர் இந்தோனேசியர்கள், 12 பேர் வங்கதேசிகள், 5 பேர் மியான்மரிகள், மற்றும் ஒருவர் வியாட்நாமியர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் மேலதிக நடவடிக்கைகளுக்காக Lenggeng குடிவரவுத்தடுப்பு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 

Advertisement

Advertisement

Advertisement