• Nov 28 2024

மட்டக்களப்பில் தொடரும் வெள்ள அனர்த்தம்...! களத்தில் இறங்கிய முப்படையினர்...! அரசாங்க அதிபர் நடவடிக்கை...!samugammedia

Sharmi / Jan 12th 2024, 1:41 pm
image

மட்டக்களப்பு  மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் 50,200 ஏக்கர் விவசாய செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்தார்

அதேவேளை, வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள்  கமநல சேவை திணைக்களத்தில் பாதிப்புகளை பதிய வேண்டும்  எனவும் அவர்களுக்குரிய விவசாய  காப்புறுதி நஷ்ட ஈடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

எதிர்காலத்தில் மாவட்டத்தில் வரும் வெள்ள அனர்த்தங்களை தவிர்க்கும் முகமாக பாதிக்கப்பட்ட இனங்காணப்பட்டுள்ள பகுதிகளுக்கு ஒரு புதிய திட்டத்தை வகுத்து மக்களை பாதுகாப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை  எடுக்கபடவுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்தார்

இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மாவட்ட அரசாங்க அதிபர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் வடிகான் அமைப்பு செயல்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கான நிதி தேவையும் நமது மாவட்டத்தில் உள்ளது.  இதனை கவனத்தில் எடுத்து எதிர்காலத்தில் செயல்பட வேண்டியுள்ளது.

 எமது மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் 50,200 ஏக்கர் விவசாய செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளது.

பயிர்செய்கை நிலங்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒவ்வொருவரும் தங்களது பிரிவிலுள்ள கமநல சேவை திணைக்களத்திற்கு வந்து பாதிப்புகளை பதிய வேண்டும். விவரங்களை அப்போது அவர்களுக்குரிய விவசாய  காப்புறுதி  நஷ்ட ஈடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் 

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிரான் பிரதேச செயலகப் பிரிவில் ராணுவத்தினரின் உதவியுடன் மாணவர்கள் உயர்தர பரீட்சை நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர்.

 வாகரைப் பிரதேசத்தில் நோயாளிகளை வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லவும் உதவி புரிந்துள்ளனர்  வெள்ள அனர்த்தங்களின் போது தேவையான உதவிகளை செய்ய தயாரான நிலையில் உள்ளனர் எதிர்காலத்தில் மாவட்டத்தில் வரும் வெள்ள அனர்த்தங்களை தவிர்க்கும் முகமாக பாதிக்கப்பட்ட இனங்கானப்பட்டுள்ள பகுதிகளுக்கு ஒரு புதிய திட்டத்தை வகுத்து மக்களை பாதுகாப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எதிர்காலத்தில் எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் தொடரும் வெள்ள அனர்த்தம். களத்தில் இறங்கிய முப்படையினர். அரசாங்க அதிபர் நடவடிக்கை.samugammedia மட்டக்களப்பு  மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் 50,200 ஏக்கர் விவசாய செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்தார்அதேவேளை, வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட விவசாயிகள்  கமநல சேவை திணைக்களத்தில் பாதிப்புகளை பதிய வேண்டும்  எனவும் அவர்களுக்குரிய விவசாய  காப்புறுதி நஷ்ட ஈடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.எதிர்காலத்தில் மாவட்டத்தில் வரும் வெள்ள அனர்த்தங்களை தவிர்க்கும் முகமாக பாதிக்கப்பட்ட இனங்காணப்பட்டுள்ள பகுதிகளுக்கு ஒரு புதிய திட்டத்தை வகுத்து மக்களை பாதுகாப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை  எடுக்கபடவுள்ளது என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளிதரன் தெரிவித்தார்இன்று மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மாவட்ட அரசாங்க அதிபர் இவ்வாறு கருத்து தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,மட்டக்களப்பு மாவட்டத்தில் வடிகான் அமைப்பு செயல்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும். அதற்கான நிதி தேவையும் நமது மாவட்டத்தில் உள்ளது.  இதனை கவனத்தில் எடுத்து எதிர்காலத்தில் செயல்பட வேண்டியுள்ளது. எமது மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்தினால் 50,200 ஏக்கர் விவசாய செய்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளது. பயிர்செய்கை நிலங்கள் பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒவ்வொருவரும் தங்களது பிரிவிலுள்ள கமநல சேவை திணைக்களத்திற்கு வந்து பாதிப்புகளை பதிய வேண்டும். விவரங்களை அப்போது அவர்களுக்குரிய விவசாய  காப்புறுதி  நஷ்ட ஈடுகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிரான் பிரதேச செயலகப் பிரிவில் ராணுவத்தினரின் உதவியுடன் மாணவர்கள் உயர்தர பரீட்சை நிலையங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். வாகரைப் பிரதேசத்தில் நோயாளிகளை வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லவும் உதவி புரிந்துள்ளனர்  வெள்ள அனர்த்தங்களின் போது தேவையான உதவிகளை செய்ய தயாரான நிலையில் உள்ளனர் எதிர்காலத்தில் மாவட்டத்தில் வரும் வெள்ள அனர்த்தங்களை தவிர்க்கும் முகமாக பாதிக்கப்பட்ட இனங்கானப்பட்டுள்ள பகுதிகளுக்கு ஒரு புதிய திட்டத்தை வகுத்து மக்களை பாதுகாப்பதற்கு வேண்டிய நடவடிக்கைகளை எதிர்காலத்தில் எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Advertisement