கடற்றொழில் துறைமுகங்களில் நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரத்துடன், 750 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.
கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் சவால்களுக்கு விரைவான தீர்வுகளை வழங்கும் நோக்கில், நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாட்டில் செயற்பாட்டிலுள்ள 22 கடற்றொழில் துறைமுகங்களின் நிலைமைகள், சேவைகள் பெறுவதிலுள்ள சிக்கல்கள் மற்றும் துறைமுகப் பகுதிகளில் நிலவும் டெங்கு நோய் பரவல் பிரச்சினை என்பன குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், கடற்றொழில் துறைமுகங்களில் நிலவும் குறைபாடுகள் அனைத்தையும், விரைவாக நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைச்சினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும், அவை வெற்றிகரமாகச் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடற்றொழில் துறைமுகங்களில் நிலவும் பிரச்சினைகளை தீர்க்க நிதி ஒதுக்கீடு - பிரதி அமைச்சர் தகவல் கடற்றொழில் துறைமுகங்களில் நிலவும் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரத்துடன், 750 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக பிரதி அமைச்சர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார். கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் சவால்களுக்கு விரைவான தீர்வுகளை வழங்கும் நோக்கில், நேற்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இந்த விடயத்தைத் தெரிவித்துள்ளார். அத்துடன், நாட்டில் செயற்பாட்டிலுள்ள 22 கடற்றொழில் துறைமுகங்களின் நிலைமைகள், சேவைகள் பெறுவதிலுள்ள சிக்கல்கள் மற்றும் துறைமுகப் பகுதிகளில் நிலவும் டெங்கு நோய் பரவல் பிரச்சினை என்பன குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. இந்தநிலையில், கடற்றொழில் துறைமுகங்களில் நிலவும் குறைபாடுகள் அனைத்தையும், விரைவாக நிவர்த்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனப் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார். அத்துடன், மாவட்ட கடற்றொழில் ஒருங்கிணைப்புக் குழுக்கள் அமைச்சினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளதாகவும், அவை வெற்றிகரமாகச் செயற்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.