2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 524 பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
22 முதல் 60 வயதுக்குட்பட்ட பெண்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை நாடளாவிய ரீதியில் நேற்று (15) மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது மொத்தம் 598 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 27,580 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய 24 நபர்களை இதன்போது பொலிஸார் அடையாளம் கண்டனர்.
மேலும், பிடியாணை நிலுவையில் உள்ள 418 சந்தேக நபர்கள் இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
மொத்தம் 45 பேர் மதுபோதையில் வாகனம் செலுத்தியதற்காக கைது செய்யப்பட்டனர்.
மேலும் 16 பொறுப்பற்ற சாரதிகள் மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களை மீறிய 3,857 பேர் அடையாளம் காணப்பட்டனர்.
போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 524 பெண்கள் கைது 2025 ஆம் ஆண்டின் ஜனவரி மாதம் முதலாம் திகதியிலிருந்து ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் 524 பெண்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் தெரிவித்தனர்.22 முதல் 60 வயதுக்குட்பட்ட பெண்களே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.இதேவேளை நாடளாவிய ரீதியில் நேற்று (15) மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது மொத்தம் 598 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, 27,580 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.குற்றச் செயல்களுடன் நேரடியாக தொடர்புடைய 24 நபர்களை இதன்போது பொலிஸார் அடையாளம் கண்டனர்.மேலும், பிடியாணை நிலுவையில் உள்ள 418 சந்தேக நபர்கள் இந்த நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.மொத்தம் 45 பேர் மதுபோதையில் வாகனம் செலுத்தியதற்காக கைது செய்யப்பட்டனர்.மேலும் 16 பொறுப்பற்ற சாரதிகள் மற்றும் பல்வேறு போக்குவரத்து குற்றங்களை மீறிய 3,857 பேர் அடையாளம் காணப்பட்டனர்.