• Dec 16 2024

காலி சிறையில் 540 கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல்!

Chithra / Dec 16th 2024, 2:52 pm
image

 

காலி சிறைச்சாலையில் இவ்வருடம் இதுவரையில் 540 கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக புதிய அரசாங்கத்தின் முதலாவது காலி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் (12) காலி மாவட்ட செயலகத்தில் தொழிற்கல்வி பிரதியமைச்சர் நளின் ஹேவகே தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டது.

கையடக்கத் தொலைபேசிகள் கடத்தலுக்கு சிறைச்சாலை அமைந்திருந்த இடம் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளதாக காலி சிறைச்சாலையின் பிரதி பிரதான சிறைச்சாலை அதிகாரி தனுஷ்க புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

மேலும் கூட்டத்தில் பேசிய காலி மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் சேரம்,

சிறைச்சாலை மதில் சுவருக்கு மேல் பாதுகாப்பு வலை மற்றும் சிசிடிவி கமராக்களை பொருத்துவதற்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

காலி சிறையில் 540 கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல்  காலி சிறைச்சாலையில் இவ்வருடம் இதுவரையில் 540 கையடக்கத் தொலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக புதிய அரசாங்கத்தின் முதலாவது காலி மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த வாரம் (12) காலி மாவட்ட செயலகத்தில் தொழிற்கல்வி பிரதியமைச்சர் நளின் ஹேவகே தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இந்த தகவல் வெளிப்படுத்தப்பட்டது.கையடக்கத் தொலைபேசிகள் கடத்தலுக்கு சிறைச்சாலை அமைந்திருந்த இடம் பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளதாக காலி சிறைச்சாலையின் பிரதி பிரதான சிறைச்சாலை அதிகாரி தனுஷ்க புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.மேலும் கூட்டத்தில் பேசிய காலி மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜகத் சேரம்,சிறைச்சாலை மதில் சுவருக்கு மேல் பாதுகாப்பு வலை மற்றும் சிசிடிவி கமராக்களை பொருத்துவதற்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement