• Nov 28 2024

மோட்டார் சைக்கிள் பேரணி மேற்கொள்ள தயாராக இருந்த 6 நபர்கள் கைது

Anaath / Sep 8th 2024, 6:41 pm
image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சிலிண்டரினை ஏற்றி பேரணியாக செல்ல இருந்த நபர்கள் 6 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து மோட்டார் சைக்கிளில் சிலிண்டரினை கட்டி புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பேரணியாக செல்ல தயாராக இருந்தவர்களில் 6 நபர்கள் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது  செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் சிலிண்டர் கட்டி கொண்டு அதனை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் பேரணியாக செல்வதற்கு தயாராக இருந்துள்ளனர். அதனையடுத்து குறித்த சம்பவ இடத்திற்கு விரைந்த முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் அலுவலக அதிகாரிகள் மற்றும் புதுக்குடியிருப்பு பொலிஸார் மோட்டார் சைக்கிள்களை சோதனையிட்ட போது  தேர்தல் பதாதைகள் காணப்பட்டுள்ளது. 

அதனையடுத்து  குறித்த நபர்களிடம் இருந்த துண்டுபிரசுரங்கள்  , மற்றும் சிலிண்டர் ,மோட்டார் சைக்கிளையும் பொலிஸார்  புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மோட்டார் சைக்கிள் பேரணி மேற்கொள்ள தயாராக இருந்த 6 நபர்கள் கைது முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட புதுக்குடியிருப்பு நகரப்பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் சிலிண்டரினை ஏற்றி பேரணியாக செல்ல இருந்த நபர்கள் 6 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இன்று மாலை இடம்பெற்றுள்ளது.ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவு தெரிவித்து மோட்டார் சைக்கிளில் சிலிண்டரினை கட்டி புதுக்குடியிருப்பு நகர் பகுதியில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பேரணியாக செல்ல தயாராக இருந்தவர்களில் 6 நபர்கள் புதுக்குடியிருப்பு பொலிஸாரால் கைது  செய்யப்பட்டுள்ளனர்.குறித்த நபர்கள் ஒரு மோட்டார் சைக்கிளில் சிலிண்டர் கட்டி கொண்டு அதனை பின் தொடர்ந்து மோட்டார் சைக்கிள் பேரணியாக செல்வதற்கு தயாராக இருந்துள்ளனர். அதனையடுத்து குறித்த சம்பவ இடத்திற்கு விரைந்த முல்லைத்தீவு மாவட்ட தேர்தல் அலுவலக அதிகாரிகள் மற்றும் புதுக்குடியிருப்பு பொலிஸார் மோட்டார் சைக்கிள்களை சோதனையிட்ட போது  தேர்தல் பதாதைகள் காணப்பட்டுள்ளது. அதனையடுத்து  குறித்த நபர்களிடம் இருந்த துண்டுபிரசுரங்கள்  , மற்றும் சிலிண்டர் ,மோட்டார் சைக்கிளையும் பொலிஸார்  புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்து சென்றுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை புதுக்குடியிருப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement