• Jan 11 2025

63 அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி வரி தொடர்பில் அரசு எடுத்த தீர்மானம்

Chithra / Jan 2nd 2025, 8:08 am
image

 

அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட 63 பொருட்களுக்கான இறக்குமதி வரியை எந்த திருத்தமும் இல்லாமல் பராமரிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இது தொடர்பில் 2024 டிசம்பர் 31 அன்று ஒரு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பருப்பு, வெள்ளை சர்க்கரை, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், சிவப்பு வெங்காயம், தேங்காய் எண்ணெய், தாவர எண்ணெய், பதிவு செய்யப்பட்ட மீன் மற்றும் காய்ந்த மிளகாய் போன்ற பொருட்களின் மீதான தற்போதைய விகிதங்களைப் பராமரிப்பதன் மூலம் பொருட்களுக்கான விலை உயர்வைத் தடுக்கமுடியும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அத்துடன், அரிசி, தினை, பச்சைப்பயறு, சோளம், மஞ்சள், பழங்கள், மீன் மற்றும் கருவாடு போன்ற உணவுப் பொருட்களின் மீதான வரி விகிதங்களும் தக்கவைக்கப்பட்டுள்ளன என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

63 அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதி வரி தொடர்பில் அரசு எடுத்த தீர்மானம்  அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உட்பட தேர்ந்தெடுக்கப்பட்ட 63 பொருட்களுக்கான இறக்குமதி வரியை எந்த திருத்தமும் இல்லாமல் பராமரிக்கவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.இது தொடர்பில் 2024 டிசம்பர் 31 அன்று ஒரு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டதாக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.இதன்படி, பருப்பு, வெள்ளை சர்க்கரை, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், சிவப்பு வெங்காயம், தேங்காய் எண்ணெய், தாவர எண்ணெய், பதிவு செய்யப்பட்ட மீன் மற்றும் காய்ந்த மிளகாய் போன்ற பொருட்களின் மீதான தற்போதைய விகிதங்களைப் பராமரிப்பதன் மூலம் பொருட்களுக்கான விலை உயர்வைத் தடுக்கமுடியும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.அத்துடன், அரிசி, தினை, பச்சைப்பயறு, சோளம், மஞ்சள், பழங்கள், மீன் மற்றும் கருவாடு போன்ற உணவுப் பொருட்களின் மீதான வரி விகிதங்களும் தக்கவைக்கப்பட்டுள்ளன என்று அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement