• Apr 29 2026

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம்: சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிப்பு..!

Ziya / Jun 4th 2025, 5:17 pm
image

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில்  கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள,  சந்தேகநபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பின் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார். 
 
பூஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த சந்தேகநபர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம்  முன்னிலைப்படுத்தப்பட்டார்.  

இதன்போது அடையாளங் காண்பதற்காக இரு சாட்சியாளர்கள் முன்னிலையானதுடன், அவர்களால் சந்தேகநபர் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. 
 
அதன்பின்னர் இந்த சந்தேகநபர் பலத்த பாதுகாப்புடன் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலியின் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.  

இதன் போது சந்தேகநபரை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது. 
 
அன்றைய தினம் சந்தேகநபரை ஸ்கைப் தொழிநுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம்: சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிப்பு. கணேமுல்ல சஞ்சீவ கொலைச் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில்  கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள,  சந்தேகநபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நடைபெற்ற அடையாள அணிவகுப்பின் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.  பூஸ்ஸ சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இந்த சந்தேகநபர் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம்  முன்னிலைப்படுத்தப்பட்டார்.  இதன்போது அடையாளங் காண்பதற்காக இரு சாட்சியாளர்கள் முன்னிலையானதுடன், அவர்களால் சந்தேகநபர் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.  அதன்பின்னர் இந்த சந்தேகநபர் பலத்த பாதுகாப்புடன் கொழும்பு பிரதான நீதவான் தனுஜா லக்மாலியின் முன்னிலையில் பிரசன்னப்படுத்தப்பட்டார்.  இதன் போது சந்தேகநபரை எதிர்வரும் 6 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.  அன்றைய தினம் சந்தேகநபரை ஸ்கைப் தொழிநுட்பம் ஊடாக நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement