• Nov 28 2024

சீரற்ற வானிலை காரணமாக புத்தளத்தில் 6615 பேர் பாதிப்பு..!

Sharmi / Nov 26th 2024, 7:36 pm
image

புத்தளம் மாவட்டத்தில் சீரற்ற வானிலை காரணமாக 1893 குடும்பங்களைச் சேர்ந்த 6,615 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அந்த வகையில், புத்தளம், முந்தல், கற்பிட்டி, வன்னாத்தவில்லுவ, நாத்தாண்டிய, மாதம்பை, ஆராச்சிக்கட்டுவ, பல்லம மற்றும் வென்னப்புவ ஆகிய 9 பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 55 கிராம சேவகர்கள் பிரிவுகளைச் சேர்ந்த 1893 குடும்பங்களைச் சேர்ந்த 6615 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் கற்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவிலேயே அதிகளவிலான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இங்கு 11 கிராம சேவகர் பிரிவுகளில் 685 குடும்பங்களைச் சேர்ந்த 2,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 22 கிராம சேவகர் பிரிவுகளில் 361 குடும்பங்களைச் சேர்ந்த 1396 பேரும், வன்னாத்தவில்லுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 2 கிராம சேவகர் பிரிவில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 56 பேரும், நாத்தாண்டிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 6 கிராம சேவகர் பிரிவுகளில் 54 குடும்பங்களைச் சேர்ந்த 196 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மாதம்பை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  1 கிராம சேவகர் பிரிவில் 1 குடும்பத்தைச் சேர்ந்த இருவரும், ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 1 கிராம சேவகர் பிரிவில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 22 பேரும், வென்னப்புவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  5 கிராம சேவகர் பிரிவுகளில் 106 குடும்பங்களைச் சேர்ந்த 380 பேரும், புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 6 கிராம சேவகர் பிரிவுகளில் 661 குடும்பங்களைச் சேர்ந்த 2179 பேரும், பல்லம பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 1 கிராம சேவகர் பிரிவுகளில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை , வெள்ள அனர்த்தத்தினால் மாதம்பை, வன்னாத்தவில்லு மற்றும் பல்லம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தலா ஒவ்வொரு வீடுகளும், நாத்தாண்டி பிரதேச செயலாளர் பிரிவில் மூன்று வீடுகளும் பகுதி அளவிலும் பாதிக்கப்பட்டுள்ளன.

அதேவேளை, புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் 50 குடும்பங்களைச் சேர்ந்த 175 பேர் தமது உறவினர்களின் வீடுகளிலும் தங்கியுள்ளனர் என்றும் புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

சீரற்ற வானிலை காரணமாக புத்தளத்தில் 6615 பேர் பாதிப்பு. புத்தளம் மாவட்டத்தில் சீரற்ற வானிலை காரணமாக 1893 குடும்பங்களைச் சேர்ந்த 6,615 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.அந்த வகையில், புத்தளம், முந்தல், கற்பிட்டி, வன்னாத்தவில்லுவ, நாத்தாண்டிய, மாதம்பை, ஆராச்சிக்கட்டுவ, பல்லம மற்றும் வென்னப்புவ ஆகிய 9 பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 55 கிராம சேவகர்கள் பிரிவுகளைச் சேர்ந்த 1893 குடும்பங்களைச் சேர்ந்த 6615 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதில் கற்பிட்டி பிரதேச செயலாளர் பிரிவிலேயே அதிகளவிலான குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.இங்கு 11 கிராம சேவகர் பிரிவுகளில் 685 குடும்பங்களைச் சேர்ந்த 2,380 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 22 கிராம சேவகர் பிரிவுகளில் 361 குடும்பங்களைச் சேர்ந்த 1396 பேரும், வன்னாத்தவில்லுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 2 கிராம சேவகர் பிரிவில் 17 குடும்பங்களைச் சேர்ந்த 56 பேரும், நாத்தாண்டிய பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 6 கிராம சேவகர் பிரிவுகளில் 54 குடும்பங்களைச் சேர்ந்த 196 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.மேலும், மாதம்பை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  1 கிராம சேவகர் பிரிவில் 1 குடும்பத்தைச் சேர்ந்த இருவரும், ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 1 கிராம சேவகர் பிரிவில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 22 பேரும், வென்னப்புவ பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  5 கிராம சேவகர் பிரிவுகளில் 106 குடும்பங்களைச் சேர்ந்த 380 பேரும், புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 6 கிராம சேவகர் பிரிவுகளில் 661 குடும்பங்களைச் சேர்ந்த 2179 பேரும், பல்லம பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 1 கிராம சேவகர் பிரிவுகளில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதேவேளை , வெள்ள அனர்த்தத்தினால் மாதம்பை, வன்னாத்தவில்லு மற்றும் பல்லம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் தலா ஒவ்வொரு வீடுகளும், நாத்தாண்டி பிரதேச செயலாளர் பிரிவில் மூன்று வீடுகளும் பகுதி அளவிலும் பாதிக்கப்பட்டுள்ளன.அதேவேளை, புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் 50 குடும்பங்களைச் சேர்ந்த 175 பேர் தமது உறவினர்களின் வீடுகளிலும் தங்கியுள்ளனர் என்றும் புத்தளம் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement