• Mar 05 2026

சட்டவிரோதமாக புதையல் தோண்டிய 7 பேர் கைது!

Chithra / Jan 23rd 2026, 10:22 am
image

 

பதுளை - ரிதிமாலியத்த - பெத்தங்கஹாராவ பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய 07 சந்தேக நபர்கள் ரிதிமாலியத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


நேற்று வியாழக்கிழமை (22) காலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போதே, இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.


கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஹங்குரன்கெத்த, ரிதீமாலியத்த, கந்தளாய் மற்றும் இரக்குவானை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும், 41 முதல் 66 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.


இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  ரிதிமாலியத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

சட்டவிரோதமாக புதையல் தோண்டிய 7 பேர் கைது  பதுளை - ரிதிமாலியத்த - பெத்தங்கஹாராவ பகுதியில் சட்டவிரோதமாக புதையல் தோண்டிய 07 சந்தேக நபர்கள் ரிதிமாலியத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.நேற்று வியாழக்கிழமை (22) காலை இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போதே, இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளது.கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஹங்குரன்கெத்த, ரிதீமாலியத்த, கந்தளாய் மற்றும் இரக்குவானை ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும், 41 முதல் 66 வயதுக்குட்பட்டவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை  ரிதிமாலியத்த பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.  

Advertisement

Advertisement

Advertisement