• Jan 30 2025

7 அத்தியாவசிய புற்றுநோய் மருந்துகள் பற்றாக்குறை

Tharmini / Jan 29th 2025, 4:13 pm
image

புற்றுநோய் சிகிச்சைக்கு தேவையான 7 மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இலங்கை புற்றுநோயியல் நிபுணர்கள் கல்லூரியின் பதிவாளர், இரத்த புற்றுநோய் நிபுணரான டொக்டர் புத்திக சோமவர்தன, இரண்டு வகையான வாய் மருந்துகளுக்கும் ஐந்து வகையான தடுப்பூசிகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்தார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மெற்கண்டவாறு தெரிவித்தார்.

மருந்துப் பதிவு, விநியோகம் மற்றும் இறக்குமதி நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள பல சிக்கல்கள் இந்தப் பற்றாக்குறையை பாதித்துள்ளதாகவும் கலாநிதி புத்திக சோமவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையமும், மாநில மருந்து ஒழுங்குமுறைக் கழகமும் இணைந்து உரிய மருந்துகளை விரைவில் கொள்முதல் செய்து வருவதாக அவர் கூறினார்.

இலங்கையில் புற்றுநோய் சிகிச்சைக்கு 28 வாய்வழி மருந்துகளும் 33 ஊசி மருந்துகளும் இன்றியமையாதவை என்றும் விசேட வைத்தியர் டாக்டர் புத்திக சோமவர்தன கூறுகிறார்.

7 அத்தியாவசிய புற்றுநோய் மருந்துகள் பற்றாக்குறை புற்றுநோய் சிகிச்சைக்கு தேவையான 7 மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.இலங்கை புற்றுநோயியல் நிபுணர்கள் கல்லூரியின் பதிவாளர், இரத்த புற்றுநோய் நிபுணரான டொக்டர் புத்திக சோமவர்தன, இரண்டு வகையான வாய் மருந்துகளுக்கும் ஐந்து வகையான தடுப்பூசிகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்தார்.இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மெற்கண்டவாறு தெரிவித்தார்.மருந்துப் பதிவு, விநியோகம் மற்றும் இறக்குமதி நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள பல சிக்கல்கள் இந்தப் பற்றாக்குறையை பாதித்துள்ளதாகவும் கலாநிதி புத்திக சோமவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையமும், மாநில மருந்து ஒழுங்குமுறைக் கழகமும் இணைந்து உரிய மருந்துகளை விரைவில் கொள்முதல் செய்து வருவதாக அவர் கூறினார்.இலங்கையில் புற்றுநோய் சிகிச்சைக்கு 28 வாய்வழி மருந்துகளும் 33 ஊசி மருந்துகளும் இன்றியமையாதவை என்றும் விசேட வைத்தியர் டாக்டர் புத்திக சோமவர்தன கூறுகிறார்.

Advertisement

Advertisement

Advertisement