• Nov 25 2024

இந்திய இழுவைமடிப்படகுகளால் இலங்கைக்கு 700 மில்லியன் இழப்பு...!

Anaath / Jul 5th 2024, 10:53 am
image

அத்துமீறிய இந்திய இழுவைமடி படகுகளினால் இலங்கைக்கு 700 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீன்பிடி அமைச்சு தெரிவித்துள்ளது. 

இந்திய மீனவர்கள் வடக்குக் கடற்பரப் பில் மீண்டும் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுவரும் நிலையில், அத்துமீறிய மீன்பிடிக்காக கடந்த இரண்டு வாரங்களில்  50க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,  அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் படகு மோதி ஸ்ரீலங்கா கடற்படைச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்ததையடுத்து இந்த விடயங்கள் இரு நாடுகளுக்கும் இடையில் பூதாகரமான விடயங்களாக மாற்றம் பெற்றுள்ள நிலையிலேயே, அத்துமீறிய மீன்பிடி தொடர்பான பாதிப்புகளை இந்திய அரசாங்கத் துக்கு இலங்கை தெளிவுபடுத்தியுள்ளது.

 இது தொடர்பான மேலும் சில விடயங் கள் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் மீன்பிடி அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய இழுவைமடிப்படகுகளால் இலங்கைக்கு 700 மில்லியன் இழப்பு. அத்துமீறிய இந்திய இழுவைமடி படகுகளினால் இலங்கைக்கு 700 மில்லியன் ரூபா இழப்பு ஏற்பட்டுள்ளதாக மீன்பிடி அமைச்சு தெரிவித்துள்ளது. இந்திய மீனவர்கள் வடக்குக் கடற்பரப் பில் மீண்டும் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுவரும் நிலையில், அத்துமீறிய மீன்பிடிக்காக கடந்த இரண்டு வாரங்களில்  50க்கும் மேற்பட்ட மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது,  அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர்களின் படகு மோதி ஸ்ரீலங்கா கடற்படைச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்ததையடுத்து இந்த விடயங்கள் இரு நாடுகளுக்கும் இடையில் பூதாகரமான விடயங்களாக மாற்றம் பெற்றுள்ள நிலையிலேயே, அத்துமீறிய மீன்பிடி தொடர்பான பாதிப்புகளை இந்திய அரசாங்கத் துக்கு இலங்கை தெளிவுபடுத்தியுள்ளது. இது தொடர்பான மேலும் சில விடயங் கள் இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் மீன்பிடி அமைச்சு தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement