2022 ஆம் ஆண்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத நிறுவனத்திடமிருந்து தரமற்ற மருந்துகளைக் கொள்வனவு செய்ததன் மூலம் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறிய குற்றத்திற்காக, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் பாரிய அபராதங்களை விதித்துள்ளது.
நீதியரசர் பீ. பத்மன் சூரசேன தலைமையிலான மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இன்று வெள்ளிக்கிழமை (27) இந்தத் தீர்ப்பை வழங்கியது.
நீதிமன்ற உத்தரவின்படி, குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தங்களது தனிப்பட்ட அரசாங்கத்திற்குப் அபராதம் தொகைகளைச் செலுத்த வேண்டும்.
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல: 75 மில்லியன் ரூபா.
சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக்க சந்திரகுப்த: 50 மில்லியன் ரூபா.
தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் முன்னாள் தலைவர்; 50 மில்லியன் ரூபா.
தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித்த குணசேகர; 50 மில்லியன் ரூபா
மருந்து விநியோகப் பிரிவு முன்னாள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் துஷித சுதர்ஷன; 50 மில்லியன் ரூபா.
இலங்கை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் அமைப்பு மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பின்னரே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தரமற்ற 'இம்யுனோகுளோபுலின்' தடுப்பூசி கொள்வனவு ஊழல் காரணமாக ஏற்கனவே கெஹெலிய ரம்புக்வெல்ல விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கெஹெலியவிற்கு 75 மில்லியன் ரூபா அபராதம் - உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு 2022 ஆம் ஆண்டு இந்திய கடன் திட்டத்தின் கீழ், பதிவு செய்யப்படாத நிறுவனத்திடமிருந்து தரமற்ற மருந்துகளைக் கொள்வனவு செய்ததன் மூலம் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறிய குற்றத்திற்காக, முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல உட்பட அதிகாரிகளுக்கு உயர்நீதிமன்றம் பாரிய அபராதங்களை விதித்துள்ளது.நீதியரசர் பீ. பத்மன் சூரசேன தலைமையிலான மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இன்று வெள்ளிக்கிழமை (27) இந்தத் தீர்ப்பை வழங்கியது.நீதிமன்ற உத்தரவின்படி, குற்றம் சுமத்தப்பட்டவர்கள் தங்களது தனிப்பட்ட அரசாங்கத்திற்குப் அபராதம் தொகைகளைச் செலுத்த வேண்டும்.முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல: 75 மில்லியன் ரூபா.சுகாதார அமைச்சின் முன்னாள் செயலாளர் ஜனக்க சந்திரகுப்த: 50 மில்லியன் ரூபா.தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் முன்னாள் தலைவர்; 50 மில்லியன் ரூபா.தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித்த குணசேகர; 50 மில்லியன் ரூபாமருந்து விநியோகப் பிரிவு முன்னாள் பிரதி பணிப்பாளர் வைத்தியர் துஷித சுதர்ஷன; 50 மில்லியன் ரூபா.இலங்கை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் அமைப்பு மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட பின்னரே இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.தரமற்ற 'இம்யுனோகுளோபுலின்' தடுப்பூசி கொள்வனவு ஊழல் காரணமாக ஏற்கனவே கெஹெலிய ரம்புக்வெல்ல விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.