• May 03 2026

35 வயதானவரை திருமணம் செய்த 75 வயது முதியவர்; மறுநாளே உயிரிழந்த சோகம் - அதிர்ச்சியில் உறவினர்கள்!

shanu / Oct 2nd 2025, 1:12 pm
image

உத்தரப்பிரதேசத்தின் ஜவுன்பூர் மாவட்டத்தில் உள்ள குச்சுமுச் கிராமத்தில் வசிக்கும்  75 வயதான முதியவர், திருமணம் முடிந்த மறுநாளே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 



குறித்த முதியவர் ஒரு வருடத்திற்கு முன்பு தனது முதல் மனைவி இறந்ததன் பிறகு தனிமையில் வசித்து வந்தார். மீண்டும் திருமணம் செய்வதற்கு  அவரது  குடும்பத்தினரால் தடை விதிக்கப்பட்டது. 


இருப்பினும், நான் இரண்டாம் திருமணம் செய்தே தீருவேன் என்று தனது முடிவில் உறுதியாக இருந்த அவர், குடும்ப எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல்  கடந்த செப்டம்பர் 29ஆம் திகதி அன்று ஜலால்பூர் பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். 


முதலில் நீதிமன்றத்தில் திருமணப் பதிவு செய்யப்பட்டதோடு, அருகிலுள்ள கோயிலில் பாரம்பரிய முறைப்படி திருமணச் சடங்குகள் நடைபெற்றன.


இந்தத் திருமணம் குடும்ப உறவினர்கள் இல்லாமல் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், திருமணம் முடிந்த மறுநாள் அதிகாலை முதியவரின் உடல்நலம் திடீரென மோசமடைந்தது. அதனையடுத்து அவசரமாக மருத்துவமனைக்கு  கொண்டு சென்ற போதும் அவர் உயிரிழந்து விட்டார். 


அவரது திடீர் உயிரிழப்பு  கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிராம மக்கள் இதன் பின்னணியில் பல்வேறு ஊகங்களை முன்வைத்து வருகின்றனர்.


இது குறித்து மணப்பெண்ணிடம் கேட்ட போது, இரவு நன்றாக தான் இருந்தார். ஆனால், அதிகாலையில் என்ன ஆனது என்றே தெரியவில்லை என சோகம் படர்ந்த முகத்துடன் கூறினார். 


இது தொடர்பான விசாரணைகள பொலிஸார்  மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

35 வயதானவரை திருமணம் செய்த 75 வயது முதியவர்; மறுநாளே உயிரிழந்த சோகம் - அதிர்ச்சியில் உறவினர்கள் உத்தரப்பிரதேசத்தின் ஜவுன்பூர் மாவட்டத்தில் உள்ள குச்சுமுச் கிராமத்தில் வசிக்கும்  75 வயதான முதியவர், திருமணம் முடிந்த மறுநாளே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த முதியவர் ஒரு வருடத்திற்கு முன்பு தனது முதல் மனைவி இறந்ததன் பிறகு தனிமையில் வசித்து வந்தார். மீண்டும் திருமணம் செய்வதற்கு  அவரது  குடும்பத்தினரால் தடை விதிக்கப்பட்டது. இருப்பினும், நான் இரண்டாம் திருமணம் செய்தே தீருவேன் என்று தனது முடிவில் உறுதியாக இருந்த அவர், குடும்ப எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல்  கடந்த செப்டம்பர் 29ஆம் திகதி அன்று ஜலால்பூர் பகுதியைச் சேர்ந்த 35 வயது பெண் ஒருவரை திருமணம் செய்துகொண்டார். முதலில் நீதிமன்றத்தில் திருமணப் பதிவு செய்யப்பட்டதோடு, அருகிலுள்ள கோயிலில் பாரம்பரிய முறைப்படி திருமணச் சடங்குகள் நடைபெற்றன.இந்தத் திருமணம் குடும்ப உறவினர்கள் இல்லாமல் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. ஆனால், திருமணம் முடிந்த மறுநாள் அதிகாலை முதியவரின் உடல்நலம் திடீரென மோசமடைந்தது. அதனையடுத்து அவசரமாக மருத்துவமனைக்கு  கொண்டு சென்ற போதும் அவர் உயிரிழந்து விட்டார். அவரது திடீர் உயிரிழப்பு  கிராமத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிராம மக்கள் இதன் பின்னணியில் பல்வேறு ஊகங்களை முன்வைத்து வருகின்றனர்.இது குறித்து மணப்பெண்ணிடம் கேட்ட போது, இரவு நன்றாக தான் இருந்தார். ஆனால், அதிகாலையில் என்ன ஆனது என்றே தெரியவில்லை என சோகம் படர்ந்த முகத்துடன் கூறினார். இது தொடர்பான விசாரணைகள பொலிஸார்  மேற்கொண்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement