• Jan 19 2026

ஜப்பானில் 7.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

shanuja / Dec 9th 2025, 12:42 pm
image

ஜப்பானில்  சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் அங்கு பதற்றம் உருவாகியுள்ளது.


 

ஜப்பானின் அமோரி மாகாணத்தில் மிசாவாவில் இருந்து கிழக்குப் பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டது. 

இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7.6 ஆக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அதனைத் தொடர்ந்து ஜப்பான் வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. 

நிலநடுக்கம் ஏற்பட்டபோதிலும், அதனால் ஏற்பட்ட சேதம் குறித்த விபரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.


ஜப்பான் பூகம்பத்தால் ஏற்படும் சுனாமி அலைகள் ஜப்பான் மற்றும் ரஷ்யாவின் கடற்கரைகளில் மையப்பகுதியிலிருந்து 1000 கிலோமீற்றருக்குள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.


நிலநடுக்கத்தால் சுமார் மூன்று மீற்றர் (சுமார் 10 அடி) உயரம் வரையிலான ராட்சத அலைகள் ஜப்பானின் வடகிழக்கு கடற்கரையைத் தாக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இந்த நிலநடுக்கமானது ஆமோரி மாகாணக் கடற்கரையில் இருந்து சுமார் 80 கிலோமீற்றர் தொலைவில், 50 கிலோமீற்றர் ஆழத்தில் பதிவாகியுள்ளது.


இதையடுத்து, கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான உயரமான பகுதிகளுக்கு வெளியேறுமாறு ஜப்பான் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

ஜப்பானில் 7.6 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஜப்பானில்  சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதால் அங்கு பதற்றம் உருவாகியுள்ளது. ஜப்பானின் அமோரி மாகாணத்தில் மிசாவாவில் இருந்து கிழக்குப் பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 7.6 ஆக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அதனைத் தொடர்ந்து ஜப்பான் வானிலை ஆய்வு மையம் சுனாமி எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. நிலநடுக்கம் ஏற்பட்டபோதிலும், அதனால் ஏற்பட்ட சேதம் குறித்த விபரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.ஜப்பான் பூகம்பத்தால் ஏற்படும் சுனாமி அலைகள் ஜப்பான் மற்றும் ரஷ்யாவின் கடற்கரைகளில் மையப்பகுதியிலிருந்து 1000 கிலோமீற்றருக்குள் ஏற்பட வாய்ப்புள்ளதாக பசுபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.நிலநடுக்கத்தால் சுமார் மூன்று மீற்றர் (சுமார் 10 அடி) உயரம் வரையிலான ராட்சத அலைகள் ஜப்பானின் வடகிழக்கு கடற்கரையைத் தாக்கக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கமானது ஆமோரி மாகாணக் கடற்கரையில் இருந்து சுமார் 80 கிலோமீற்றர் தொலைவில், 50 கிலோமீற்றர் ஆழத்தில் பதிவாகியுள்ளது.இதையடுத்து, கடலோரப் பகுதிகளில் வசிக்கும் மக்களைப் பாதுகாப்பான உயரமான பகுதிகளுக்கு வெளியேறுமாறு ஜப்பான் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement