யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றத்தில் கைதான 8 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
நெடுந்தீவுக் கடற்பரப்பில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், நேற்று சனிக்கிழமை இந்திய மீனவர்கள் 8 பேரைக் கைது செய்ததுடன், இரண்டு படகுகளையும் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களை நீரியல் வளத்துறையினர் ஊடாக ஊர்காவற்றுறை நீதிமன்ற பதில் நீதிவான் சாலினி ஜெயபாலச்சந்திரன் முன்னிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்தியபோது, 8 பேரையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் உத்தரவிட்டார்.
நெடுந்தீவுக் கடற்பரப்பில் கைதான 8 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றத்தில் கைதான 8 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.நெடுந்தீவுக் கடற்பரப்பில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், நேற்று சனிக்கிழமை இந்திய மீனவர்கள் 8 பேரைக் கைது செய்ததுடன், இரண்டு படகுகளையும் கைப்பற்றினர்.கைது செய்யப்பட்ட மீனவர்களை நீரியல் வளத்துறையினர் ஊடாக ஊர்காவற்றுறை நீதிமன்ற பதில் நீதிவான் சாலினி ஜெயபாலச்சந்திரன் முன்னிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை ஆஜர்படுத்தியபோது, 8 பேரையும் எதிர்வரும் 20ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு பதில் நீதிவான் உத்தரவிட்டார்.