• May 07 2026

வடிகானில் சிக்கிய 9 அடி நீளமான முதலை - அச்சத்தில் மக்கள்!

shanu / May 7th 2026, 4:43 pm
image

அம்பாறை - சாய்ந்தமருது பிரதான வீதியில் உள்ள  வடிகானில்  முதலை ஒன்று திசை மாறி சிக்கிக் கொண்டுள்ளது. 


குறித்த முதலை  சுமார் 9 அடி நீளமும் மிகவும் பருமனுமான முதலை  எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.  


 சாய்ந்தமருது  பிரதான வீதியில் உள்ள  வடிகானில் இன்று(7) காலை  முதலை சிக்கிக் கொண்டதை அப்பகுதி மக்கள் அவதானித்துள்ளனர். 


அதனையடுத்து சாய்ந்தமருது பொலிஸாருக்கு தகவல்  வழங்கியுள்ளனர். 


தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த முதலையை   உரிய முறையில் அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். 


வடிகானுக்குள் முதலை சிக்கியுள்ளதால்  மக்கள் பெரும் அச்சத்தில் வீதியால் பயணித்து வருகின்றனர். 

வடிகானில் சிக்கிய 9 அடி நீளமான முதலை - அச்சத்தில் மக்கள் அம்பாறை - சாய்ந்தமருது பிரதான வீதியில் உள்ள  வடிகானில்  முதலை ஒன்று திசை மாறி சிக்கிக் கொண்டுள்ளது. குறித்த முதலை  சுமார் 9 அடி நீளமும் மிகவும் பருமனுமான முதலை  எனவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.   சாய்ந்தமருது  பிரதான வீதியில் உள்ள  வடிகானில் இன்று(7) காலை  முதலை சிக்கிக் கொண்டதை அப்பகுதி மக்கள் அவதானித்துள்ளனர். அதனையடுத்து சாய்ந்தமருது பொலிஸாருக்கு தகவல்  வழங்கியுள்ளனர். தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் குறித்த முதலையை   உரிய முறையில் அகற்றும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். வடிகானுக்குள் முதலை சிக்கியுள்ளதால்  மக்கள் பெரும் அச்சத்தில் வீதியால் பயணித்து வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement