• Apr 15 2026

விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த 10 மாத பெண் குழந்தை; உடலுறுப்பு தானத்தால் ஐவருக்கு மறுவாழ்வு

Chithra / Feb 15th 2026, 2:13 pm
image

 

இந்தியாவின் - கேரளா மாநிலத்தில் வீதி விபத்தில் உயிரிழந்த 10 மாத பெண் குழந்தையின் உடலுறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ள சம்பவம்  இடம்பெற்றுள்ளது.


இதன் மூலம் உறுப்பு தானத்திற்காக காத்திருந்த ஐந்து பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.


கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள மலப்பள்ளி என்ற பகுதியைச் சேர்ந்த அருண் ஆபிரகாம் மற்றும் ஷெரின் அன்ஜான் ஆகியோரின் 10 மாத பெண் குழந்தையான அலின் ஷெரின் ஆபிரகாம் என்ற குழந்தையே விபத்தில் இவ்வாறு உயிரிழந்துள்ளது. 


கடந்த 5ஆம் திகதி, கோட்டயம் அருகே பள்ளம் பகுதியில் தாய் மற்றும் பாட்டி, தாத்தாவுடன் பயணித்த போது விபத்தில் படுகாயமடைந்த பெண் குழந்தை, கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.


இதையடுத்து, பெற்றோரின் ஒப்புதலுடன் குழந்தையின் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.


கல்லீரல், 2 சிறுநீரகங்கள், இதய வால்வு, கண்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.இந்த உடல் உறுப்புகள் ஐவருக்கு பொருத்தப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.


இந்த உடலுறுப்பு தானம் மூலம், கேரளாவின் இளம் வயதில் உறுப்பு தானம் செய்தவராக குழந்தை அலின் ஷெரின் ஆபிரகாம் மாறியுள்ளார்.

விபத்தில் பரிதாபமாக உயிரிழந்த 10 மாத பெண் குழந்தை; உடலுறுப்பு தானத்தால் ஐவருக்கு மறுவாழ்வு  இந்தியாவின் - கேரளா மாநிலத்தில் வீதி விபத்தில் உயிரிழந்த 10 மாத பெண் குழந்தையின் உடலுறுப்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ள சம்பவம்  இடம்பெற்றுள்ளது.இதன் மூலம் உறுப்பு தானத்திற்காக காத்திருந்த ஐந்து பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள மலப்பள்ளி என்ற பகுதியைச் சேர்ந்த அருண் ஆபிரகாம் மற்றும் ஷெரின் அன்ஜான் ஆகியோரின் 10 மாத பெண் குழந்தையான அலின் ஷெரின் ஆபிரகாம் என்ற குழந்தையே விபத்தில் இவ்வாறு உயிரிழந்துள்ளது. கடந்த 5ஆம் திகதி, கோட்டயம் அருகே பள்ளம் பகுதியில் தாய் மற்றும் பாட்டி, தாத்தாவுடன் பயணித்த போது விபத்தில் படுகாயமடைந்த பெண் குழந்தை, கொச்சியில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.இதையடுத்து, பெற்றோரின் ஒப்புதலுடன் குழந்தையின் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.கல்லீரல், 2 சிறுநீரகங்கள், இதய வால்வு, கண்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.இந்த உடல் உறுப்புகள் ஐவருக்கு பொருத்தப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இந்த உடலுறுப்பு தானம் மூலம், கேரளாவின் இளம் வயதில் உறுப்பு தானம் செய்தவராக குழந்தை அலின் ஷெரின் ஆபிரகாம் மாறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement