• Jul 14 2026

காதலியுடன் லாட்ஜில் தங்கிய 19 வயது இளைஞர் மர்ம மரணம்!

Ziya / Jul 11th 2026, 12:20 pm
image

ஒரு லாட்ஜில், காதலியுடன் தங்கியிருந்த 19 வயது இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


இந்த மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


உயிரிழந்தவர் பிலாய் பகுதியைச் சேர்ந்த ஷதாப் ஷேக் (19) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.


அவர் தனது 23 வயது காதலியுடன் கடந்த ஜூலை 8ஆம் தேதி மாலை கோஹ்கா பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


விசாரணையில், இருவரும் அறையில் மது அருந்தியதாகவும், அப்போது ஷதாப்பின் முன்னாள் காதலியிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.


அந்த வாக்குவாதத்தின் போது, மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் இளம்பெண் தனது மணிக்கட்டை காயப்படுத்திக் கொண்டு பின்னர் மயக்கமடைந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பின்னர், காதலியின் ஸ்கார்ஃப்பைப் பயன்படுத்தி ஷதாப் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


எனினும், இது தற்கொலையா அல்லது வேறு யாரேனும் தொடர்புடைய கொலையா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் எந்த அதிகாரப்பூர்வ முடிவும் இதுவரை வெளியாகவில்லை. உடற்கூறாய்வு அறிக்கைக்காக பொலிசார் காத்திருக்கின்றனர்.


இதற்கிடையில், சம்பவம் நடந்த இரவு நண்பர்கள் சிலர் லாட்ஜிற்கு வந்து கதவைத் தட்டியபோதும் பதில் கிடைக்கவில்லை என ஹோட்டல் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மறுநாள் காலை, இளம்பெண் அறையிலிருந்து வெளியே வந்து ஷதாப் தூங்கிக் கொண்டிருப்பதாக கூறிவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.


பின்னர் நண்பர்கள் அறைக்குள் சென்று பார்த்தபோது, ஷதாப் அசைவின்றி கிடந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.


இந்தச் சம்பவம் தொடர்பாக இளம்பெண்ணிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


 உடற்கூறாய்வு அறிக்கை மற்றும் தடயவியல் ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே உயிரிழப்பிற்கான உண்மையான காரணம் உறுதிப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

காதலியுடன் லாட்ஜில் தங்கிய 19 வயது இளைஞர் மர்ம மரணம் ஒரு லாட்ஜில், காதலியுடன் தங்கியிருந்த 19 வயது இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் இந்தியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த மரணம் கொலையா அல்லது தற்கொலையா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.உயிரிழந்தவர் பிலாய் பகுதியைச் சேர்ந்த ஷதாப் ஷேக் (19) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.அவர் தனது 23 வயது காதலியுடன் கடந்த ஜூலை 8ஆம் தேதி மாலை கோஹ்கா பகுதியில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.விசாரணையில், இருவரும் அறையில் மது அருந்தியதாகவும், அப்போது ஷதாப்பின் முன்னாள் காதலியிடமிருந்து வந்த தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.அந்த வாக்குவாதத்தின் போது, மதுபோதையில் இருந்ததாகக் கூறப்படும் இளம்பெண் தனது மணிக்கட்டை காயப்படுத்திக் கொண்டு பின்னர் மயக்கமடைந்ததாக ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பின்னர், காதலியின் ஸ்கார்ஃப்பைப் பயன்படுத்தி ஷதாப் தூக்கிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.எனினும், இது தற்கொலையா அல்லது வேறு யாரேனும் தொடர்புடைய கொலையா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் எந்த அதிகாரப்பூர்வ முடிவும் இதுவரை வெளியாகவில்லை. உடற்கூறாய்வு அறிக்கைக்காக பொலிசார் காத்திருக்கின்றனர்.இதற்கிடையில், சம்பவம் நடந்த இரவு நண்பர்கள் சிலர் லாட்ஜிற்கு வந்து கதவைத் தட்டியபோதும் பதில் கிடைக்கவில்லை என ஹோட்டல் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். மறுநாள் காலை, இளம்பெண் அறையிலிருந்து வெளியே வந்து ஷதாப் தூங்கிக் கொண்டிருப்பதாக கூறிவிட்டு சென்றதாகவும் கூறப்படுகிறது.பின்னர் நண்பர்கள் அறைக்குள் சென்று பார்த்தபோது, ஷதாப் அசைவின்றி கிடந்ததால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்திருந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.இந்தச் சம்பவம் தொடர்பாக இளம்பெண்ணிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடற்கூறாய்வு அறிக்கை மற்றும் தடயவியல் ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே உயிரிழப்பிற்கான உண்மையான காரணம் உறுதிப்படுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

Advertisement

Advertisement

Advertisement