புத்தளம் மாவட்டத்தின் முந்தல் தொடக்கம் மங்களஎளிய புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட நவன்டான்குளம் பிரதேசத்தில் யுவதி ஒருவர் புகையிரத்தின் முன் பாய்ந்து தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த சம்பவத்தில் 20 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.
கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கிச் சென்ற அலுவலகப் புகையிரதம் இன்று (16) காலை முந்தல் - நவன்டான்குளம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது, புகையிரத கடவைக்கு அருகே நின்றுகொண்டிருந்த இளம் யவதி திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு புகையிரத்துடன் மோதுண்ட குறித்த யுவதியின் சடலத்தை புகையிரத அதிகாரிகள் புத்தளம் - பாலாவி புகையிரத நிலையத்தில் ஒப்படைத்த பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச் சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புத்தளத்தில் 20 வயது இளம் பெண் எடுத்த விபரீத முடிவு. புத்தளம் மாவட்டத்தின் முந்தல் தொடக்கம் மங்களஎளிய புகையிரத நிலையங்களுக்கு இடைப்பட்ட நவன்டான்குளம் பிரதேசத்தில் யுவதி ஒருவர் புகையிரத்தின் முன் பாய்ந்து தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.குறித்த சம்பவத்தில் 20 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக முந்தல் பொலிஸார் தெரிவித்தனர்.கொழும்பில் இருந்து புத்தளம் நோக்கிச் சென்ற அலுவலகப் புகையிரதம் இன்று (16) காலை முந்தல் - நவன்டான்குளம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது, புகையிரத கடவைக்கு அருகே நின்றுகொண்டிருந்த இளம் யவதி திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.இவ்வாறு புகையிரத்துடன் மோதுண்ட குறித்த யுவதியின் சடலத்தை புகையிரத அதிகாரிகள் புத்தளம் - பாலாவி புகையிரத நிலையத்தில் ஒப்படைத்த பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இச் சம்பவம் தொடர்பில் முந்தல் பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.