• May 07 2025

வவுனியாவில் பொலிஸாரிடம் சிக்கிய 20 வயது இளைஞன்...! நடந்தது என்ன?

Sharmi / May 28th 2024, 8:06 pm
image

வவுனியாவில் 80 போதை மாத்திரைகளுடன் 20 வயது இளைஞன் போதை ஒழிப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா குருமன்காடு பகுதியில் மாவட்ட போதை ஒழிப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் கஜேந்திரன் தலைமையிலான பொலிஸார் இன்று(28) மாலை விசேட சோதனை நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டனர்.

இதன்போது இளைஞர் ஒருவரிடம் இருந்து 80 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வியாபார நோக்கில் குறித்த போதை மாத்திரைகளை வவுனியா, குருமன்காடு பகுதிக்கு கொண்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.

வவுனியா, பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞரே போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த இளைஞரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 



வவுனியாவில் பொலிஸாரிடம் சிக்கிய 20 வயது இளைஞன். நடந்தது என்ன வவுனியாவில் 80 போதை மாத்திரைகளுடன் 20 வயது இளைஞன் போதை ஒழிப்பு பிரிவு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,வவுனியா குருமன்காடு பகுதியில் மாவட்ட போதை ஒழிப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் கஜேந்திரன் தலைமையிலான பொலிஸார் இன்று(28) மாலை விசேட சோதனை நடவடிக்கை ஒன்றினை மேற்கொண்டனர்.இதன்போது இளைஞர் ஒருவரிடம் இருந்து 80 போதை மாத்திரைகள் மீட்கப்பட்டுள்ளது.இதனையடுத்து குறித்த இளைஞர் கைது செய்யப்பட்டதுடன், அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் வியாபார நோக்கில் குறித்த போதை மாத்திரைகளை வவுனியா, குருமன்காடு பகுதிக்கு கொண்டு வந்துள்ளமை தெரியவந்துள்ளது.வவுனியா, பூந்தோட்டம் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞரே போதை மாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில் மேலதிக விசாரணைகளின் பின்னர் குறித்த இளைஞரை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

Advertisement

Advertisement

Advertisement

Buy Now