குருநாகல் பொலிஸ் பாதுகாப்பில் இருந்து தப்பிச் சென்ற இளம் பெண்ணொருவர் மோதர பகுதியில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குருநாகல் வேவ்கல பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளம் பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட குறித்த இளம் பெண் சந்தேகநபர் ஒருவர், குருநாகல் பொலிஸாரிடம் இருந்து தப்பிச் சென்று மோதரை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருந்ததாக குருநாகல் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சில தினங்களுக்கு முன்னர் குருநாகல் பொலிஸாரால் சுமார் 7 கிராம் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த போது பொலிஸ் பிடியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்தேகநபர் மோதர பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என குருநாகல் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
பொலிஸ் பாதுகாப்பில் இருந்து தப்பிச் சென்ற 24 வயது இளம் பெண் மீண்டும் கைது. samugammedia குருநாகல் பொலிஸ் பாதுகாப்பில் இருந்து தப்பிச் சென்ற இளம் பெண்ணொருவர் மோதர பகுதியில் வைத்து மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.குருநாகல் வேவ்கல பிரதேசத்தைச் சேர்ந்த 24 வயதுடைய இளம் பெண்ணொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட குறித்த இளம் பெண் சந்தேகநபர் ஒருவர், குருநாகல் பொலிஸாரிடம் இருந்து தப்பிச் சென்று மோதரை பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பதுங்கியிருந்ததாக குருநாகல் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.சில தினங்களுக்கு முன்னர் குருநாகல் பொலிஸாரால் சுமார் 7 கிராம் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டு, மேலதிக விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த போது பொலிஸ் பிடியில் இருந்து தப்பிச் சென்றுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.இந்த சந்தேகநபர் மோதர பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என குருநாகல் பொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.