• Dec 06 2024

Sharmi / Oct 25th 2024, 8:26 am
image

ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது இணையத்தில் கணினி குற்றங்களை செய்ததாக சந்தேகத்தின் பேரில் மூன்று சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், காலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போப் வீதி, கிங்தோட்டை பகுதியில் வைத்து நேற்று (24) மாலை இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்கள் 33 மற்றும் 38 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது 05 கையடக்கத் தொலைபேசிகள், உரிமையற்ற வெளிநாட்டு கடவுச்சீட்டு மற்றும் 04 வங்கி அட்டைகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

காலியில் மூன்று சீன பிரஜைகள் கைது. ஹோட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது இணையத்தில் கணினி குற்றங்களை செய்ததாக சந்தேகத்தின் பேரில் மூன்று சீன பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.காலி பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், காலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட போப் வீதி, கிங்தோட்டை பகுதியில் வைத்து நேற்று (24) மாலை இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.சந்தேகநபர்கள் 33 மற்றும் 38 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.இதன்போது 05 கையடக்கத் தொலைபேசிகள், உரிமையற்ற வெளிநாட்டு கடவுச்சீட்டு மற்றும் 04 வங்கி அட்டைகள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement