• Jun 28 2024

பேய் மாளிகையில் பெரும் சண்டை..! பரபரப்பை ஏற்படுத்திய தம்பதி; கள்ளக்காதலால் நேர்ந்த கதி..!

Chithra / Jun 25th 2024, 10:39 am
image

Advertisement

 

கொழும்பு  - நவகமுவ பிரதேசத்தில் 'பேய் மாளிகை'யைப் பார்க்கச் சென்ற பெண் ஒருவர் அவரது கணவரால் தாக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண் அவரது கள்ளக்காதலனுடன் பேய் மாளிகையைப் பார்க்கச் சென்றுள்ள நிலையில், அங்கு கணவன் சவப்பெட்டியில் பூதவுடலாக நடித்துக் கொண்டிருந்துள்ளார்.

இதன்போது, ​​21 வயதுடைய மனைவியைத் தாக்க முயன்ற கணவர் உட்பட, மோதலில் ஈடுபட்ட 12 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த திருமணமான தம்பதியினர் சில காலமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், சட்டரீதியாக விவாகரத்து பெறவில்லை எனவும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்க கடுவெல நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.

நவகமுவ பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்டவர்களே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தாக்குதலில் ஈடுபட்ட இருதரப்பையும் சேர்ந்த 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேய் மாளிகையில் பெரும் சண்டை. பரபரப்பை ஏற்படுத்திய தம்பதி; கள்ளக்காதலால் நேர்ந்த கதி.  கொழும்பு  - நவகமுவ பிரதேசத்தில் 'பேய் மாளிகை'யைப் பார்க்கச் சென்ற பெண் ஒருவர் அவரது கணவரால் தாக்கப்பட்ட சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.குறித்த பெண் அவரது கள்ளக்காதலனுடன் பேய் மாளிகையைப் பார்க்கச் சென்றுள்ள நிலையில், அங்கு கணவன் சவப்பெட்டியில் பூதவுடலாக நடித்துக் கொண்டிருந்துள்ளார்.இதன்போது, ​​21 வயதுடைய மனைவியைத் தாக்க முயன்ற கணவர் உட்பட, மோதலில் ஈடுபட்ட 12 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.குறித்த திருமணமான தம்பதியினர் சில காலமாக பிரிந்து வாழ்ந்து வருவதாகவும், சட்டரீதியாக விவாகரத்து பெறவில்லை எனவும் தெரியவந்துள்ளது.சந்தேகநபர்கள் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட பின்னர் தலா ஒரு இலட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுவிக்க கடுவெல நீதவான் நேற்று உத்தரவிட்டுள்ளார்.நவகமுவ பிரதேசத்தில் வசிக்கும் 19 வயதுக்கும் 24 வயதுக்கும் இடைப்பட்டவர்களே பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.தாக்குதலில் ஈடுபட்ட இருதரப்பையும் சேர்ந்த 6 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வெளியேறியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement