முல்லைத்தீவு, முள்ளியவளையில் உள்ள 59 ஆவது படைப்பிரிவு முகாமில் கைவிடப்பட்ட கட்டடத்தின் செங்கல் சுவர் இடிந்து வீழ்ந்ததில் இராணுவச் சிப்பாய் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
அத்துடன் மேலும் 3 இராணுவச் சிப்பாய்கள் காயமடைந்துள்ளனர்.
இந்தத் தகவலை பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
குருநாகலைச் சேர்ந்த 24 வயதுடைய இராணுவச் சிப்பாயே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்றபோது உயிரிழந்த சிப்பாயும், காயமடைந்த 3 சிப்பாய்களும் விறகு சேகரித்துக் கொண்டிருந்தனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.