• Dec 08 2024

மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளிய பாரவூர்தி- பெண் பரிதாப மரணம்..!

Sharmi / Aug 10th 2024, 12:38 pm
image

வெலிப்பன்ன பிரதேசத்தில் நேற்று (09) இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மத்துகமவில் இருந்து அளுத்கம நோக்கி பயணித்த கொள்கலன் பாரவூர்தி அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் பெண் ஒருவரும் 6 வயது சிறுமியும் காயமடைந்து நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தர்காநகரில் வசிக்கும்  34 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் கொள்கலன் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் வெலிப்பன்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மோட்டார் சைக்கிளை மோதித் தள்ளிய பாரவூர்தி- பெண் பரிதாப மரணம். வெலிப்பன்ன பிரதேசத்தில் நேற்று (09) இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.மத்துகமவில் இருந்து அளுத்கம நோக்கி பயணித்த கொள்கலன் பாரவூர்தி அதே திசையில் பயணித்த மோட்டார் சைக்கிளின் பின்பகுதியில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.விபத்தில் பெண் ஒருவரும் 6 வயது சிறுமியும் காயமடைந்து நாகொட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், பெண் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.தர்காநகரில் வசிக்கும்  34 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.விபத்து தொடர்பில் கொள்கலன் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் வெலிப்பன்ன பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement