• Sep 09 2024

மட்டக்களப்பில் விபத்தில் சிக்கிய சிவில் சமூக செயற்பாட்டாளர் பரிதாப மரணம்...!

Sharmi / Mar 22nd 2024, 9:19 am
image

Advertisement

மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலையவெளியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் பிரபல சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கரடியனாறு பகுதியில் இருந்து செங்கலடி நோக்கி சிவில் சமூக செயற்பாட்டாளர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனமொன்றின் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.

இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

கரடியனாறு - புலையவெளி பிரதான வீதி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் செங்கலடி கொம்மாதுறை பகுதியைச் சேர்ந்த விபத்தில் 54 வயதுடைய தம்பிநாயகம் ஸ்ரீபாலு என்னும் சிவில் சமூக செயற்பாட்டாளரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை,  உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்இ திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.நசீர் சடலத்தை பார்வையிட்டு விசாரணை நடாத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.


மட்டக்களப்பில் விபத்தில் சிக்கிய சிவில் சமூக செயற்பாட்டாளர் பரிதாப மரணம். மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புலையவெளியில் நேற்று மாலை இடம்பெற்ற விபத்தில் பிரபல சிவில் சமூக செயற்பாட்டாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,கரடியனாறு பகுதியில் இருந்து செங்கலடி நோக்கி சிவில் சமூக செயற்பாட்டாளர் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தபோது வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கனரக வாகனமொன்றின் மீது மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானது.இவ் விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.கரடியனாறு - புலையவெளி பிரதான வீதி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் செங்கலடி கொம்மாதுறை பகுதியைச் சேர்ந்த விபத்தில் 54 வயதுடைய தம்பிநாயகம் ஸ்ரீபாலு என்னும் சிவில் சமூக செயற்பாட்டாளரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.இதேவேளை,  உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன்இ திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.நசீர் சடலத்தை பார்வையிட்டு விசாரணை நடாத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement