• May 13 2026

மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும் அரச பேருந்தும் மோதி விபத்து

Chithra / May 13th 2026, 11:50 am
image

கொழும்பு - கதிர்காமம் பிரதான வீதியில், திக்வெல்ல - பொல்கஹமுல்ல பகுதியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு அருகில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தும், இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. 


இன்று புதன்கிழமை (13) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து அம்பலாந்தோட்டை திசையில் இருந்து பயணித்துள்ளது.


அதேநேரம், கதிர்காமம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸுடன் மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளது.


மேலும், இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளில்  பொலிஸார் ஈடுபட்டுவருவதாக தெரிவித்துள்ளனர்.

மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும் அரச பேருந்தும் மோதி விபத்து கொழும்பு - கதிர்காமம் பிரதான வீதியில், திக்வெல்ல - பொல்கஹமுல்ல பகுதியில் உள்ள தனியார் ஆடைத் தொழிற்சாலைக்கு அருகில் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்தும், இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. இன்று புதன்கிழமை (13) காலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற பேருந்து அம்பலாந்தோட்டை திசையில் இருந்து பயணித்துள்ளது.அதேநேரம், கதிர்காமம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபை பஸ்ஸுடன் மோதி இந்த விபத்து நேர்ந்துள்ளது.மேலும், இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளில்  பொலிஸார் ஈடுபட்டுவருவதாக தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement