• Nov 27 2024

தமிழ் பொதுவேட்பாளர் தமிழீழத் தேசியத்தை உலகிற்கு எடுத்தியம்புவதற்கு தேவை! உருத்திரகுமாரன்

Chithra / Jun 6th 2024, 1:09 pm
image

 

தமிழ் பொதுவேட்பாளர் தமிழீழத் தேசியத்தை உலகிற்கு எடுத்தியம்புவதற்கு தேவை - இரண்டாவது தெரிவை பகிஷ்கரிப்போம். என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரன்  தெரிவித்துள்ளார்.

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காம் தவணைக்காலத்தின் முதலாவது தொலைத்தொடர்பு அமர்வு ஜூன் மாதம் 1ந் திகதி நடைபெற்றது.

அதில் சிறிலங்காவில்எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் விடயம் தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்நிலைப்பாடு பற்றி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதில் பல உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்தார்கள். பேசியவர்களில் பொஎரும்பான்மையோர் தமிழ்பொதுவேட்பாளரை நிறுத்தவேண்டும் என்ற கருத்தைவலியுறுத்தினார்கள்.

இந்த அமர்வில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் தெரிவித்துள்ளதாவது,

1972 அரசியல் அமைப்புச்சட்டத்திற்கோ 1978 அரசியல் அமைப்புச் சட்டத்திற்கோ நாங்கள் தமிழர்கள் பங்குதாரர்கள் அல்ல அதற்கு நாங்கள் சம்மதமும் கொடுக்கவில்லை எனவே அது எங்களைக்கட்டுப்படுத்த முடியாது. 

கடந்த 14 வருடங்களாக பாராளுமன்றத் தேர்தல் என்றாலும் சரி மாகாணசபைத் தேர்தல் என்றாலும் சரி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது அவையைக் கூட்டி அத் தேர்தல்களை எவ்வாறு எங்களுடைய விடுதலைப் போராட்டத்திற்கு ஒரு கருவியாகப் பாவிக்கலாம் என்ற அடிப்படையிதான் நாங்கள் முடிவுகள் எடுத்துள்ளோம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாடும் இவ்வாறாகவேதான் இருந்திருக்கிறது. 1995 ஆம் ஆண்டுசந்திரிக்காவின் தேர்தலை தமிழீழ விடுதலைப் புலிகள் பகிஷ்கரிக்கவில்லை.

2005 இல் ரணில் விக்கிரமசிங்க எங்களிற்கு எதிராக சர்வதேச சதிவலைப் பின்னலை பின்னுவதன் காரணமாக அவர் ஜனாதிபதியாக வருவது தமிழர்களிற்கு நன்மை பயக்காது என்ற நிலைப்பாட்டை விடுதலைப் புலிகள் எடுத்ததனர். 

சிறிலங்கா தேர்தல்கள் தொடர்பாக விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு எப்போதுமே ஒரு உத்தி சார்ந்ததாகவே இருந்திருக்கின்றது. நாடுகடந்ததமிழீழ அரசாங்கம் அவ் அடிப்படையிலேயே சிறிலங்கா தேர்தல்கள் தொடர்பான தீர்மானங்களை எடுத்து வந்திருக்கின்றது.

இன்று மூன்றுதெரிவுகள் சிறிலங்கா தேர்தல் தொடர்பாக தமிழ்மக்களிடையே வைக்கப்பட்டுள்ளன.

1- சிங்களத்துடன் பேரம் பேசி எமக்கு அதிக உரிமைகளைதருபவர்களை நாம் ஆதரிக்க வேண்டும்.

2- ஜனாபதி தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும்.

3- தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தவேண்டும்

70 ஆண்டு கால அரசியல் வரலாறு சிங்களத்துடன் எவ்வளவுபேரம் பேசினாலும் சிங்களம் எதனையுமே அமுல் நடத்தாது.

சிங்கள புத்திஜீவிகள் மாறிவிட்டார்கள் என்ற ஒது கருத்து இன்றைக்கு முன்வைக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடைபெற்று இன்று 15 ஆண்டுகள்ஆகிவிட்டன. 

இன்றுவரை ஒரு சிங்கள புத்திஜீவியோ ஒருசிங்கள அரசியல் தலைவரோ ஒரு சிங்கள மாணவத்தலைவரோ தாங்கள் செய்த பிழையை ஏற்றுக் கொள்ளவும்இல்லை மன்னிப்பும் கேட்கவும் இல்லை.

“அறகளவில்” சிங்களவர்கள் போட்ட கோஷம் கோத்தபாய ஒரு திருடன்என்று ஆனால் கோத்தபாய ஒரு கொலைகாரன் என்றுகூறவில்லை. 

பேரினவாதம் சிங்கள அரசியல் கலாச்சாரம்தமிழர்களுக்கு எந்த ஒரு அதிகாரத்தையும் கொடுக்க சம்மதிக்காது. எனவே பேரம் பேசுவது என்ற கதையை தமிழ்த்தலைவர்கள் கைவிடவேண்டும். சிங்களத்துடன் பேசிய பேரத்தை இந்தியாவினால் கூட அமுல் நடத்த முடியவில்லை.

தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்துவது  மற்றும் இரண்டாவது தெரிவு தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாக முடிவெடுக்க வேண்டும்.

தமிழ் பொது வேட்பாளர் மூலமாக நாங்கள் ஒரு அரசியல் திரட்சியைக் கொண்டுவரலாம், சுயநிர்ணயத்திற்கான திரட்சியைக் கொண்டு வரலாம் எனக் கூறினார்.

தமிழ் பொதுவேட்பாளரைக் கொண்டுவருவதன் மூலம் எங்களுடைய பிரச்சனைகளை சிங்கள தொலைக்காட்சியில் பேசலாம் என்று கூறி பொதுவேட்பாளர் நிலைப்பாட்டை சிறுமைப்படுத்தவேண்டாம் என அரசியல் தலைவர்களைகேட்டுக் கேட்டுக்கொள்கின்றேன் நாங்கள் இன்று பேசவேண்டிய சமூகம் உலக சமூகம்.

மேலும் தமிழ் பொதுவேட்பாளர் நிலைப்பாடு எமது அடுத்த கட்ட அரசியல் நிகழ்வான பொதுவாக்கெடுப்பிற்கு உதவும் எனவும் கூறினார்.

நாங்கள் சிங்களத் தலைமையை பகிஷ்கரிக்கின்றோம் என்ற அடிப்படையில் இரண்டாவது தெரிவை தமிழர்கள் பகிஷ்கரிக்கவேண்டும் எனக் கூறினார்.

இதன் மூலம் தமிழ்பொதுவேட்பாளர் நிலைப்பாட்டையும் தமிழ் தேசிய மக்கள்முன்ன்ணியின் பகிஷ்கரிப்பின் நிலைப்பாட்டையும் இணைக்கலாம்

தமிழ் பொதுவேட்பாளர் கணிசமான வாக்குகளை தமிழ்மக்களிடம் இருந்து பெறமுடியாமல் இதுக்கக்கூடும். ஆனால் நாங்கள் எங்கோ ஒரு இடத்தில் தொடங்கத்தான் வேண்டும். சிலர் சர்வதேச சக்திகள் தமிழ் பொதுவேட்பாளர் நிலைப்பாட்டை விரும்பமாட்டார்கள் எனக் கூறலாம்.

நாங்கள் சர்வதேச சக்திகளின் விருப்பிற்கு தலையாட்டும் பொம்மைகளாக இருக்கத் தேவையில்லை. எங்களுடைய அரசியல் விருப்பங்களை நாங்கள் சர்வதேச சக்திகளுக்கு எடுத்துக்காட்ட வேண்டும்.

இன்றுவரை சர்வதேச சக்திகள் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தங்களுடைய பூகோள அரசியல் நலன்களுக்கு பயன்படுத்துகின்றார்களேயொழிய தமிழர்களிற்கு நீதி வழங்க வேண்டிய செயற்பாடுகளில் ஈடுபடவில்லை.

2015 ஆம் ஆண்டு மகிந்தா சீனாவின் பக்கம்சாய்வதால் நல்லாட்சி வரும் என்று சொல்லி தமிழர்களை பாவித்து சர்வதேச சமுதாயம் மகிந்தாவை நீக்கியது.

சர்வதேச சமுதாயத்திடம் நாம் பேரம் பேச வேண்டுமேயொழிய அவர்களை சந்தோஷப் படுத்திக் கொள்ளக்கூடாது. என்றார்.

தமிழ் பொதுவேட்பாளர் தமிழீழத் தேசியத்தை உலகிற்கு எடுத்தியம்புவதற்கு தேவை உருத்திரகுமாரன்  தமிழ் பொதுவேட்பாளர் தமிழீழத் தேசியத்தை உலகிற்கு எடுத்தியம்புவதற்கு தேவை - இரண்டாவது தெரிவை பகிஷ்கரிப்போம். என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் உருத்திரகுமாரன்  தெரிவித்துள்ளார்.நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நான்காம் தவணைக்காலத்தின் முதலாவது தொலைத்தொடர்பு அமர்வு ஜூன் மாதம் 1ந் திகதி நடைபெற்றது.அதில் சிறிலங்காவில்எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர் விடயம் தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்நிலைப்பாடு பற்றி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.இதில் பல உறுப்பினர்கள் கருத்துத் தெரிவித்தார்கள். பேசியவர்களில் பொஎரும்பான்மையோர் தமிழ்பொதுவேட்பாளரை நிறுத்தவேண்டும் என்ற கருத்தைவலியுறுத்தினார்கள்.இந்த அமர்வில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் தெரிவித்துள்ளதாவது,1972 அரசியல் அமைப்புச்சட்டத்திற்கோ 1978 அரசியல் அமைப்புச் சட்டத்திற்கோ நாங்கள் தமிழர்கள் பங்குதாரர்கள் அல்ல அதற்கு நாங்கள் சம்மதமும் கொடுக்கவில்லை எனவே அது எங்களைக்கட்டுப்படுத்த முடியாது. கடந்த 14 வருடங்களாக பாராளுமன்றத் தேர்தல் என்றாலும் சரி மாகாணசபைத் தேர்தல் என்றாலும் சரி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது அவையைக் கூட்டி அத் தேர்தல்களை எவ்வாறு எங்களுடைய விடுதலைப் போராட்டத்திற்கு ஒரு கருவியாகப் பாவிக்கலாம் என்ற அடிப்படையிதான் நாங்கள் முடிவுகள் எடுத்துள்ளோம்.தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைப்பாடும் இவ்வாறாகவேதான் இருந்திருக்கிறது. 1995 ஆம் ஆண்டுசந்திரிக்காவின் தேர்தலை தமிழீழ விடுதலைப் புலிகள் பகிஷ்கரிக்கவில்லை.2005 இல் ரணில் விக்கிரமசிங்க எங்களிற்கு எதிராக சர்வதேச சதிவலைப் பின்னலை பின்னுவதன் காரணமாக அவர் ஜனாதிபதியாக வருவது தமிழர்களிற்கு நன்மை பயக்காது என்ற நிலைப்பாட்டை விடுதலைப் புலிகள் எடுத்ததனர். சிறிலங்கா தேர்தல்கள் தொடர்பாக விடுதலைப் புலிகளின் நிலைப்பாடு எப்போதுமே ஒரு உத்தி சார்ந்ததாகவே இருந்திருக்கின்றது. நாடுகடந்ததமிழீழ அரசாங்கம் அவ் அடிப்படையிலேயே சிறிலங்கா தேர்தல்கள் தொடர்பான தீர்மானங்களை எடுத்து வந்திருக்கின்றது.இன்று மூன்றுதெரிவுகள் சிறிலங்கா தேர்தல் தொடர்பாக தமிழ்மக்களிடையே வைக்கப்பட்டுள்ளன.1- சிங்களத்துடன் பேரம் பேசி எமக்கு அதிக உரிமைகளைதருபவர்களை நாம் ஆதரிக்க வேண்டும்.2- ஜனாபதி தேர்தலை பகிஷ்கரிக்க வேண்டும்.3- தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்தவேண்டும்70 ஆண்டு கால அரசியல் வரலாறு சிங்களத்துடன் எவ்வளவுபேரம் பேசினாலும் சிங்களம் எதனையுமே அமுல் நடத்தாது.சிங்கள புத்திஜீவிகள் மாறிவிட்டார்கள் என்ற ஒது கருத்து இன்றைக்கு முன்வைக்கப்பட்டது. முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடைபெற்று இன்று 15 ஆண்டுகள்ஆகிவிட்டன. இன்றுவரை ஒரு சிங்கள புத்திஜீவியோ ஒருசிங்கள அரசியல் தலைவரோ ஒரு சிங்கள மாணவத்தலைவரோ தாங்கள் செய்த பிழையை ஏற்றுக் கொள்ளவும்இல்லை மன்னிப்பும் கேட்கவும் இல்லை.“அறகளவில்” சிங்களவர்கள் போட்ட கோஷம் கோத்தபாய ஒரு திருடன்என்று ஆனால் கோத்தபாய ஒரு கொலைகாரன் என்றுகூறவில்லை. பேரினவாதம் சிங்கள அரசியல் கலாச்சாரம்தமிழர்களுக்கு எந்த ஒரு அதிகாரத்தையும் கொடுக்க சம்மதிக்காது. எனவே பேரம் பேசுவது என்ற கதையை தமிழ்த்தலைவர்கள் கைவிடவேண்டும். சிங்களத்துடன் பேசிய பேரத்தை இந்தியாவினால் கூட அமுல் நடத்த முடியவில்லை.தமிழ் பொதுவேட்பாளரை நிறுத்துவது  மற்றும் இரண்டாவது தெரிவு தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் நிலைப்பாடு தொடர்பாக முடிவெடுக்க வேண்டும்.தமிழ் பொது வேட்பாளர் மூலமாக நாங்கள் ஒரு அரசியல் திரட்சியைக் கொண்டுவரலாம், சுயநிர்ணயத்திற்கான திரட்சியைக் கொண்டு வரலாம் எனக் கூறினார்.தமிழ் பொதுவேட்பாளரைக் கொண்டுவருவதன் மூலம் எங்களுடைய பிரச்சனைகளை சிங்கள தொலைக்காட்சியில் பேசலாம் என்று கூறி பொதுவேட்பாளர் நிலைப்பாட்டை சிறுமைப்படுத்தவேண்டாம் என அரசியல் தலைவர்களைகேட்டுக் கேட்டுக்கொள்கின்றேன் நாங்கள் இன்று பேசவேண்டிய சமூகம் உலக சமூகம்.மேலும் தமிழ் பொதுவேட்பாளர் நிலைப்பாடு எமது அடுத்த கட்ட அரசியல் நிகழ்வான பொதுவாக்கெடுப்பிற்கு உதவும் எனவும் கூறினார்.நாங்கள் சிங்களத் தலைமையை பகிஷ்கரிக்கின்றோம் என்ற அடிப்படையில் இரண்டாவது தெரிவை தமிழர்கள் பகிஷ்கரிக்கவேண்டும் எனக் கூறினார்.இதன் மூலம் தமிழ்பொதுவேட்பாளர் நிலைப்பாட்டையும் தமிழ் தேசிய மக்கள்முன்ன்ணியின் பகிஷ்கரிப்பின் நிலைப்பாட்டையும் இணைக்கலாம்தமிழ் பொதுவேட்பாளர் கணிசமான வாக்குகளை தமிழ்மக்களிடம் இருந்து பெறமுடியாமல் இதுக்கக்கூடும். ஆனால் நாங்கள் எங்கோ ஒரு இடத்தில் தொடங்கத்தான் வேண்டும். சிலர் சர்வதேச சக்திகள் தமிழ் பொதுவேட்பாளர் நிலைப்பாட்டை விரும்பமாட்டார்கள் எனக் கூறலாம்.நாங்கள் சர்வதேச சக்திகளின் விருப்பிற்கு தலையாட்டும் பொம்மைகளாக இருக்கத் தேவையில்லை. எங்களுடைய அரசியல் விருப்பங்களை நாங்கள் சர்வதேச சக்திகளுக்கு எடுத்துக்காட்ட வேண்டும்.இன்றுவரை சர்வதேச சக்திகள் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை தங்களுடைய பூகோள அரசியல் நலன்களுக்கு பயன்படுத்துகின்றார்களேயொழிய தமிழர்களிற்கு நீதி வழங்க வேண்டிய செயற்பாடுகளில் ஈடுபடவில்லை.2015 ஆம் ஆண்டு மகிந்தா சீனாவின் பக்கம்சாய்வதால் நல்லாட்சி வரும் என்று சொல்லி தமிழர்களை பாவித்து சர்வதேச சமுதாயம் மகிந்தாவை நீக்கியது.சர்வதேச சமுதாயத்திடம் நாம் பேரம் பேச வேண்டுமேயொழிய அவர்களை சந்தோஷப் படுத்திக் கொள்ளக்கூடாது. என்றார்.

Advertisement

Advertisement

Advertisement