• Jul 06 2025

ஊடகவியலாளர் மப்றூக் மீதான தாக்குதல்; சந்தேக நபர் தலைமறைவு - கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

Chithra / Jul 6th 2025, 3:24 pm
image

சிரேஷ்ட ஊடகவியலாளர், நாம் ஊடகர் பேரவையின் தலைவர் யூ எல் மப்றூக் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர்களை கைது செய்து - நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது.

அட்டாளைச்சேனையை சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக், கடந்த புதன்கிழமை (02) தனது நன்பர்களுடன் அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்துக்கு அருகில் பேசிக் கொண்டிருந்த போது,  சந்தேகநபர்களால்  தாக்கப்பட்டார்.

தாக்குதல் நடந்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர்கள் மது போதையில் இருந்ததாக,  இச்சம்பவம் குறித்து  அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளர் மப்றூக் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே  சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். 

ஆயினும் சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ளனர். இதேவேளை, அவர்களை கைது செய்யும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

ஊடகவியலாளர் மப்றூக் மீதான தாக்குதல்; சந்தேக நபர் தலைமறைவு - கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு சிரேஷ்ட ஊடகவியலாளர், நாம் ஊடகர் பேரவையின் தலைவர் யூ எல் மப்றூக் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர்களை கைது செய்து - நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு, அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றம்  உத்தரவு பிறப்பித்துள்ளது.அட்டாளைச்சேனையை சேர்ந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் யூ.எல். மப்றூக், கடந்த புதன்கிழமை (02) தனது நன்பர்களுடன் அட்டாளைச்சேனை பொது விளையாட்டு மைதானத்துக்கு அருகில் பேசிக் கொண்டிருந்த போது,  சந்தேகநபர்களால்  தாக்கப்பட்டார்.தாக்குதல் நடந்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர்கள் மது போதையில் இருந்ததாக,  இச்சம்பவம் குறித்து  அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் ஊடகவியலாளர் மப்றூக் செய்துள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையிலேயே  சந்தேக நபரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆயினும் சந்தேக நபர்கள் தலைமறைவாகியுள்ளனர். இதேவேளை, அவர்களை கைது செய்யும் முயற்சியில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement