• Nov 25 2024

மாத்தறை மாவட்ட அரச அதிபர் தலைமையிலான குழு புத்தளத்திற்கு நல்லிணக்க விஜயம்..!samugammedia

Tamil nila / Dec 12th 2023, 7:21 pm
image

மாத்தறை - புத்தளம் மாவட்டங்களுக்கிடையிலான ஒத்துழைப்பு ஊக்குவிப்பு வேலைத்திட்டத்தின் ஒரு அம்சமாக, மாத்தறை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அவரது குழுவினர் புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு விஜயம் செய்தனர்.

நீதி அமைச்சின் தேசிய நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம், மாத்தறை மாவட்டச் செயலகம், புத்தளம் பெரிய பள்ளிவாசல், புத்தளம் மாவட்ட சர்வமதக் குழு ஆகியன இணைந்து இந்த கலாச்சார மற்றும் சர்வமத நல்லிணக்கம் தொடர்பான நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.


அதன்படி, புத்தளம் பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், புத்தளம் மாவட்ட செயலாளர், எச்.எம்.எஸ்.பி ஹேரத், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் மாவட்ட தலைவர் அஷ்ஷெய்க் அப்துல்லா மஹ்மூத் ஆலிம், புத்தளம் சர்வமதக் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் புத்தியகம ரத்தன தேரர், தம்ம குசல தேரர், சிவஸ்ரீ சுந்தரராம குருக்கள், அருட்தந்தை யோஹான் மற்றும் அஷ்ஷெய்க் முஜீப் சாலிஹ் உள்ளிட்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.


இதன்போது,  புத்தளம் மாவ‌ட்ட செயலாளர், எச்.எம்.எஸ்.பி.ஹேரத் மற்றும் மாத்தறை மாவ‌ட்ட செயலாளர்,வை.விக்ரம ஸ்ரீ ஆகியோரின் உரைகளும் இடம்பெற்றன.

இதனையடுத்து மாத்தறை மாவட்ட செயலாளருக்கு மரியாதை செலுத்தும் வகையில் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

மேலும், வருகை தந்த குழுவினர் புத்தளம் பெரிய பள்ளிவாசல் வளாகத்தை சுற்றிப் பார்த்துடன் அங்கு மேற்கொள்ளப்படும் அன்றாட சமய சடங்குகள் குறித்தும் அறிந்து கொண்ட கொண்டனர்.

அத்துடன் ஸ்ரீவிக்கிரம இராஜசிங்க மன்னரின் ஆட்சிக் காலத்தில் புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்ட அன்பளிப்புகளையும் பள்ளிவாசலில் உள்ள வரலாற்றுக் கால கடிகாரத்தையும் குழுவினர் பார்வையிட்டனர்.




மாத்தறை மாவட்ட அரச அதிபர் தலைமையிலான குழு புத்தளத்திற்கு நல்லிணக்க விஜயம்.samugammedia மாத்தறை - புத்தளம் மாவட்டங்களுக்கிடையிலான ஒத்துழைப்பு ஊக்குவிப்பு வேலைத்திட்டத்தின் ஒரு அம்சமாக, மாத்தறை மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் அவரது குழுவினர் புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு விஜயம் செய்தனர்.நீதி அமைச்சின் தேசிய நல்லிணக்கம் மற்றும் நல்லிணக்கத்திற்கான அலுவலகம், மாத்தறை மாவட்டச் செயலகம், புத்தளம் பெரிய பள்ளிவாசல், புத்தளம் மாவட்ட சர்வமதக் குழு ஆகியன இணைந்து இந்த கலாச்சார மற்றும் சர்வமத நல்லிணக்கம் தொடர்பான நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தன.அதன்படி, புத்தளம் பெரிய பள்ளிவாசல் நிர்வாகிகள், புத்தளம் மாவட்ட செயலாளர், எச்.எம்.எஸ்.பி ஹேரத், அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் புத்தளம் மாவட்ட தலைவர் அஷ்ஷெய்க் அப்துல்லா மஹ்மூத் ஆலிம், புத்தளம் சர்வமதக் குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் புத்தியகம ரத்தன தேரர், தம்ம குசல தேரர், சிவஸ்ரீ சுந்தரராம குருக்கள், அருட்தந்தை யோஹான் மற்றும் அஷ்ஷெய்க் முஜீப் சாலிஹ் உள்ளிட்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.இதன்போது,  புத்தளம் மாவ‌ட்ட செயலாளர், எச்.எம்.எஸ்.பி.ஹேரத் மற்றும் மாத்தறை மாவ‌ட்ட செயலாளர்,வை.விக்ரம ஸ்ரீ ஆகியோரின் உரைகளும் இடம்பெற்றன.இதனையடுத்து மாத்தறை மாவட்ட செயலாளருக்கு மரியாதை செலுத்தும் வகையில் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.மேலும், வருகை தந்த குழுவினர் புத்தளம் பெரிய பள்ளிவாசல் வளாகத்தை சுற்றிப் பார்த்துடன் அங்கு மேற்கொள்ளப்படும் அன்றாட சமய சடங்குகள் குறித்தும் அறிந்து கொண்ட கொண்டனர்.அத்துடன் ஸ்ரீவிக்கிரம இராஜசிங்க மன்னரின் ஆட்சிக் காலத்தில் புத்தளம் பெரிய பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்ட அன்பளிப்புகளையும் பள்ளிவாசலில் உள்ள வரலாற்றுக் கால கடிகாரத்தையும் குழுவினர் பார்வையிட்டனர்.

Advertisement

Advertisement

Advertisement