• Nov 24 2024

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திலிருந்து யாழிற்கு தூக்குக் காவடி எடுத்த பக்தர்...!

Sharmi / Jul 18th 2024, 11:02 am
image

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திலிருந்து யாழிலுள்ள ஆலயமொன்றிற்கு தூக்குக் காவடி எடுத்து பக்தர் ஒருவர் தனது நேர்த்திக் கடனை நிறைவேற்றியுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

யாழ் சுழிபுரம் பெரியபுலோ அரசடி ஞான வைரவர் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவமானது நேற்றையதினம்(17) நடைபெற்றது.

குறித்த ஆலயத்தின் திருவிழாவானது கடந்த 05 ஆம் திகதி ஆரம்பமாகி, 12 தினங்கள் திருவிழாக்கள் இடம்பெற்றன.

13வது நாளான நேற்றையதினம்(17) பொங்கல் உற்சவம் இடம்பெற்றது. 

இதன்போது ஏராளமான பக்தர்கள் காவடி, பாற்செம்பு, கற்பூரச் சட்டி, அங்கப் பிரதிஷ்டை செய்து தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். 

குறிப்பாக பக்தர் ஒருவர் முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இருந்து தூக்குக் காவடி எடுத்து, 130 கிலோமீட்டர்கள் தூரம் தாண்டி வந்து தனது நேர்த்திக் கடனை நிறைவேற்றினார்.

அதேவேளை, நாளையதினம்(19) நாகதம்பிரான் ஆலயத்தில் இருந்து பெண்கள் பாற்செம்பு எடுத்து வந்து அபிஷேகம் இடம்பெறவுள்ளதுடன், வைரவப் பெருமானுக்கு 1008 சங்குகளால் சங்காபிஷேக நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திலிருந்து யாழிற்கு தூக்குக் காவடி எடுத்த பக்தர். முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திலிருந்து யாழிலுள்ள ஆலயமொன்றிற்கு தூக்குக் காவடி எடுத்து பக்தர் ஒருவர் தனது நேர்த்திக் கடனை நிறைவேற்றியுள்ளார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவதுயாழ் சுழிபுரம் பெரியபுலோ அரசடி ஞான வைரவர் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவமானது நேற்றையதினம்(17) நடைபெற்றது.குறித்த ஆலயத்தின் திருவிழாவானது கடந்த 05 ஆம் திகதி ஆரம்பமாகி, 12 தினங்கள் திருவிழாக்கள் இடம்பெற்றன.13வது நாளான நேற்றையதினம்(17) பொங்கல் உற்சவம் இடம்பெற்றது. இதன்போது ஏராளமான பக்தர்கள் காவடி, பாற்செம்பு, கற்பூரச் சட்டி, அங்கப் பிரதிஷ்டை செய்து தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர். குறிப்பாக பக்தர் ஒருவர் முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் இருந்து தூக்குக் காவடி எடுத்து, 130 கிலோமீட்டர்கள் தூரம் தாண்டி வந்து தனது நேர்த்திக் கடனை நிறைவேற்றினார்.அதேவேளை, நாளையதினம்(19) நாகதம்பிரான் ஆலயத்தில் இருந்து பெண்கள் பாற்செம்பு எடுத்து வந்து அபிஷேகம் இடம்பெறவுள்ளதுடன், வைரவப் பெருமானுக்கு 1008 சங்குகளால் சங்காபிஷேக நிகழ்வு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement