• Dec 11 2024

மூவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு; வீதிக்கு தள்ளப்பட்ட நபர் வாகனத்துடன் மோதி உயிரிழப்பு

Chithra / Nov 11th 2024, 11:34 am
image

 

வவுனியா நெளுக்குளம் - கலைமகள் வித்தியாலயத்திற்கு அருகில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் நபர் ஒருவர் வீதிக்கு தள்ளப்பட்ட நிலையில், வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வாகனத்துடன் மோதி உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்து நேற்று (10) மாலை இடம்பெற்றுள்ளது.

பலத்த காயமடைந்த நபர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மூன்று பேர் வீதியின் அருகே தகராறு செய்து, ஒருவருக்கொருவர் சண்டையிட்டபோது, ​​அவர்களில் ஒருவர் வீதியில் தள்ளப்பட்ட நிலையில், வீதியில் சென்ற வாகனம் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற வாகனத்தின் சாரதியையும் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மூவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறு; வீதிக்கு தள்ளப்பட்ட நபர் வாகனத்துடன் மோதி உயிரிழப்பு  வவுனியா நெளுக்குளம் - கலைமகள் வித்தியாலயத்திற்கு அருகில் இரு தரப்பினருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் நபர் ஒருவர் வீதிக்கு தள்ளப்பட்ட நிலையில், வீதியில் பயணித்துக் கொண்டிருந்த வாகனத்துடன் மோதி உயிரிழந்துள்ளார்.இந்த விபத்து நேற்று (10) மாலை இடம்பெற்றுள்ளது.பலத்த காயமடைந்த நபர் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.நேரியகுளம் பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.மூன்று பேர் வீதியின் அருகே தகராறு செய்து, ஒருவருக்கொருவர் சண்டையிட்டபோது, ​​அவர்களில் ஒருவர் வீதியில் தள்ளப்பட்ட நிலையில், வீதியில் சென்ற வாகனம் மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், விபத்தை ஏற்படுத்திவிட்டு தப்பிச் சென்ற வாகனத்தின் சாரதியையும் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை நெளுக்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement