• Dec 11 2024

சமயத் தலைவர்களுக்கும் டக்ளஸ் தேவானந்தாவுக்குமிடையே கலந்துரையாடல்!

Tharmini / Nov 11th 2024, 11:32 am
image

நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்மந்த பராமாச்சாரியார் சுவாமிகளை,

ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மரியாதையின் நிமிர்த்தம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

நல்லை ஆதீனத்திற்கு இன்று (11) காலை சென்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கடனசியின் செயலாளர் நாயகம்  டக்ளஸ் தேவானந்தா, ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக  ஞானசம்மந்த பராமாச்சாரியார் சுவாமிகளை சந்தித்ததுடன் சுவாமிகளின் நலன்கள் தொடர்பாக கேட்டறிந்தது கொண்டார்.

அத்துடன் சமகால அசியல் நிலைவரங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

இதனிடையே யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மரியாதையின் நிமிர்த்தம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆயர் இல்லத்தில் மேற்படி சந்திப்பு இன்று (11) இடம்பெற்றது.

சமகால நிலைவரங்கள் தொடர்பாக பரஸ்பரம் கலந்துரையாடப்பட்ட இச்சந்திப்பில், செயலாளர் நாயகம், டக்ளஸ் தேவானந்தாவின் பிரத்தியேக செயலாளர்  கே.தயானந்தா மற்றும் சட்டத்தரணி ஸ்ரனிஸ்லாஸ் செலஸ்ரின் முன்னாள் யாழ் .மாநக முதல்வர்  யோகேஸ்வரி பற்குணராசா ஆகியோர் கலந்துகொண்டார்.




சமயத் தலைவர்களுக்கும் டக்ளஸ் தேவானந்தாவுக்குமிடையே கலந்துரையாடல் நல்லை ஆதீன முதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக ஞானசம்மந்த பராமாச்சாரியார் சுவாமிகளை, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மரியாதையின் நிமிர்த்தம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.நல்லை ஆதீனத்திற்கு இன்று (11) காலை சென்ற ஈழ மக்கள் ஜனநாயகக் கடனசியின் செயலாளர் நாயகம்  டக்ளஸ் தேவானந்தா, ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர தேசிக  ஞானசம்மந்த பராமாச்சாரியார் சுவாமிகளை சந்தித்ததுடன் சுவாமிகளின் நலன்கள் தொடர்பாக கேட்டறிந்தது கொண்டார்.அத்துடன் சமகால அசியல் நிலைவரங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதனிடையே யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மரியாதையின் நிமிர்த்தம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஆயர் இல்லத்தில் மேற்படி சந்திப்பு இன்று (11) இடம்பெற்றது.சமகால நிலைவரங்கள் தொடர்பாக பரஸ்பரம் கலந்துரையாடப்பட்ட இச்சந்திப்பில், செயலாளர் நாயகம், டக்ளஸ் தேவானந்தாவின் பிரத்தியேக செயலாளர்  கே.தயானந்தா மற்றும் சட்டத்தரணி ஸ்ரனிஸ்லாஸ் செலஸ்ரின் முன்னாள் யாழ் .மாநகர முதல்வர்  யோகேஸ்வரி பற்குணராசா ஆகியோர் கலந்துகொண்டார்.

Advertisement

Advertisement

Advertisement