• Dec 11 2024

ஶ்ரீலங்கன் விமான சேவைகளில் ஏற்படும் தாமதம்; கட்டுநாயக்கவிற்கு அமைச்சர் விஜித திடீர் கண்காணிப்பு விஜயம்

Chithra / Nov 11th 2024, 11:23 am
image

 

ஶ்ரீலங்கன் விமான சேவைகளின் தாமதம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய அமைச்சர் விஜித ஹேரத் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் செய்துள்ளார்.

விமான நிலையத்தின் அனைத்துப் பிரிவுகளையும் பார்வையிட்ட அமைச்சர், அந்தந்தப் பிரிவு ஊழியர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடியுள்ளதாகக் கூறப்படுகிறது.

விமானம் தாமதம் ஏற்படுவது தொடர்பில் 24 மணி நேரமும் பயணிகளுக்கு உடனடித் தகவல்களை வழங்கவும், தாமத காலத்தில் பயணிகளுக்கு அதிகபட்ச வசதிகளை வழங்கவும் விமான நிலையம் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை பிரதிநிதித்துவப்படுத்தும் விசேட பிரிவு ஒன்று விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட வேண்டுமென அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

குறித்த காலதாமதங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.


ஶ்ரீலங்கன் விமான சேவைகளில் ஏற்படும் தாமதம்; கட்டுநாயக்கவிற்கு அமைச்சர் விஜித திடீர் கண்காணிப்பு விஜயம்  ஶ்ரீலங்கன் விமான சேவைகளின் தாமதம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பில் ஆராய அமைச்சர் விஜித ஹேரத் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் செய்துள்ளார்.விமான நிலையத்தின் அனைத்துப் பிரிவுகளையும் பார்வையிட்ட அமைச்சர், அந்தந்தப் பிரிவு ஊழியர்களுடன் சிநேகபூர்வமாக உரையாடியுள்ளதாகக் கூறப்படுகிறது.விமானம் தாமதம் ஏற்படுவது தொடர்பில் 24 மணி நேரமும் பயணிகளுக்கு உடனடித் தகவல்களை வழங்கவும், தாமத காலத்தில் பயணிகளுக்கு அதிகபட்ச வசதிகளை வழங்கவும் விமான நிலையம் மற்றும் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸை பிரதிநிதித்துவப்படுத்தும் விசேட பிரிவு ஒன்று விமான நிலைய வளாகத்தில் அமைக்கப்பட வேண்டுமென அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.குறித்த காலதாமதங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement