• Feb 27 2026

இறந்து கரையொதுங்கிய டொல்பின் - பார்வையிட குவியும் கல்முனை மக்கள்

Chithra / Nov 19th 2025, 11:44 am
image

அம்பாறை - கல்முனை கடற்கரை பள்ளிவாசல் முன்பாக உள்ள கடற் பிரதேசத்தில் டொல்பின் மீன் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.

இன்று  கரையொதுங்கிய குறித்த மீனை அப்பகுதி மக்கள் பார்வையிட்டதுடன் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த மீன் சுமார் 3 முதல் 4 அடி வரையான  நீளம் கொண்டதுடன் இப்பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் கொந்தளிப்பினால் கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

அத்துடன் குறித்த மீனை  காண்பதற்கு அப்பகுதி மக்கள்  வருகை தந்த வண்ணமுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை முகத்துவாரம் வெட்டப்பட்டுள்ளதனால் கடலை நோக்கி ஆற்று வாழைகள், சல்பீனியாக்கள் சென்று கடற்கரையில் தேங்கி காணப்படுகின்றது.


இறந்து கரையொதுங்கிய டொல்பின் - பார்வையிட குவியும் கல்முனை மக்கள் அம்பாறை - கல்முனை கடற்கரை பள்ளிவாசல் முன்பாக உள்ள கடற் பிரதேசத்தில் டொல்பின் மீன் ஒன்று இறந்த நிலையில் கரையொதுங்கியுள்ளது.இன்று  கரையொதுங்கிய குறித்த மீனை அப்பகுதி மக்கள் பார்வையிட்டதுடன் உரிய அதிகாரிகளுக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.குறித்த மீன் சுமார் 3 முதல் 4 அடி வரையான  நீளம் கொண்டதுடன் இப்பகுதியில் ஏற்பட்டுள்ள கடல் கொந்தளிப்பினால் கரையொதுங்கியுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.அத்துடன் குறித்த மீனை  காண்பதற்கு அப்பகுதி மக்கள்  வருகை தந்த வண்ணமுள்ளமை குறிப்பிடத்தக்கது.இதேவேளை முகத்துவாரம் வெட்டப்பட்டுள்ளதனால் கடலை நோக்கி ஆற்று வாழைகள், சல்பீனியாக்கள் சென்று கடற்கரையில் தேங்கி காணப்படுகின்றது.

Advertisement

Advertisement

Advertisement