• Nov 21 2025

மண்சரிவால் மலையக ரயில் சேவைக்கு பாதிப்பு

Chithra / Nov 19th 2025, 11:14 am
image

கொழும்பில் இருந்து பதுளை செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் நானுஓயா ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. 

ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக மலையக போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. 

இதனால் கொழும்பில் இருந்து பதுளை செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் இவ்வாறு நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. 

அத்துடன் குறித்த பகுதியில் தொடர்ச்சியாக மழையுடனான வானிலை நிலவுவதன் காரணமாக ரயில் மார்க்கத்தில் உள்ள மண்மேடுகளை அகற்றும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மண்சரிவால் மலையக ரயில் சேவைக்கு பாதிப்பு கொழும்பில் இருந்து பதுளை செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் நானுஓயா ரயில் நிலையம் வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது. ஒஹிய மற்றும் இதல்கஸ்ஹின்ன ரயில் நிலையங்களுக்கு இடையில் ஏற்பட்டுள்ள மண்சரிவு காரணமாக மலையக போக்குவரத்து சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. இதனால் கொழும்பில் இருந்து பதுளை செல்லும் அனைத்து ரயில் சேவைகளும் இவ்வாறு நானுஓயா வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன் குறித்த பகுதியில் தொடர்ச்சியாக மழையுடனான வானிலை நிலவுவதன் காரணமாக ரயில் மார்க்கத்தில் உள்ள மண்மேடுகளை அகற்றும் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தொடருந்து திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement