• Jul 03 2026

இந்தியா–ஜப்பான் உறவில் அதிரடி திருப்பம்

Ziya / Jul 2nd 2026, 12:32 pm
image

இந்தியா–ஜப்பான் உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் நடைபெறும் இந்தியா–ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாடு 2026 இன்று புதுடெல்லியில் தொடங்கியுள்ளது. ஜப்பான் பிரதமர் சானே டகாய்ச்சி , தனது முதல் அதிகாரப்பூர்வ இந்தியப் பயணமாக இந்தியா வந்துள்ள நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு பாரம்பரிய மரியாதையுடன் கோலாகல வரவேற்பு அளிக்கப்பட்டது.


அதனைத் தொடர்ந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோட மற்றும் ஜப்பான் பிரதமர் சானே டகாய்ச்சி ஆகியோர் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். 


இந்தச் சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய கூட்டாண்மை, பொருளாதாரப் பாதுகாப்பு, வர்த்தக முதலீடுகள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.


இந்தியப் பயணத்திற்கு முன்பு பேசிய சானே டகாய்ச்சி, உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலையில் அதிகரித்து வரும் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், இந்தியாவுடன் இணைந்து செயல்படுவது ஜப்பானுக்கு மிக முக்கியமானதாக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக பொருளாதார பாதுகாப்பு, வழங்கல் சங்கிலி (Supply Chain) வலுப்படுத்தல் மற்றும் உயர்தர தொழில்நுட்பத் துறைகளில் இணைந்து செயல்படுவதற்கு ஜப்பான் அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


இந்தப் பயணத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக, 150-க்கும் மேற்பட்ட ஜப்பானிய தொழில் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்கும் ஜப்பான்–இந்தியா பொருளாதார மன்றம் நடைபெற உள்ளது. இதில் புதிய முதலீடுகள், தொழில்துறை கூட்டாண்மைகள் மற்றும் உற்பத்தித் துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


இந்தியா–ஜப்பான் உறவில் அதிரடி திருப்பம் இந்தியா–ஜப்பான் உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் நடைபெறும் இந்தியா–ஜப்பான் வருடாந்திர உச்சிமாநாடு 2026 இன்று புதுடெல்லியில் தொடங்கியுள்ளது. ஜப்பான் பிரதமர் சானே டகாய்ச்சி , தனது முதல் அதிகாரப்பூர்வ இந்தியப் பயணமாக இந்தியா வந்துள்ள நிலையில், குடியரசுத் தலைவர் மாளிகையில் அவருக்கு பாரம்பரிய மரியாதையுடன் கோலாகல வரவேற்பு அளிக்கப்பட்டது.அதனைத் தொடர்ந்து, இந்தியப் பிரதமர் நரேந்திர மோட மற்றும் ஜப்பான் பிரதமர் சானே டகாய்ச்சி ஆகியோர் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இந்தச் சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய கூட்டாண்மை, பொருளாதாரப் பாதுகாப்பு, வர்த்தக முதலீடுகள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.இந்தியப் பயணத்திற்கு முன்பு பேசிய சானே டகாய்ச்சி, உலகளாவிய அரசியல் மற்றும் பொருளாதார சூழ்நிலையில் அதிகரித்து வரும் நிச்சயமற்ற தன்மைக்கு மத்தியில், இந்தியாவுடன் இணைந்து செயல்படுவது ஜப்பானுக்கு மிக முக்கியமானதாக இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக பொருளாதார பாதுகாப்பு, வழங்கல் சங்கிலி (Supply Chain) வலுப்படுத்தல் மற்றும் உயர்தர தொழில்நுட்பத் துறைகளில் இணைந்து செயல்படுவதற்கு ஜப்பான் அதிக முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.இந்தப் பயணத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக, 150-க்கும் மேற்பட்ட ஜப்பானிய தொழில் நிறுவன பிரதிநிதிகள் பங்கேற்கும் ஜப்பான்–இந்தியா பொருளாதார மன்றம் நடைபெற உள்ளது. இதில் புதிய முதலீடுகள், தொழில்துறை கூட்டாண்மைகள் மற்றும் உற்பத்தித் துறையில் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது குறித்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement