வவுனியாவில் வர்த்தக நிலையமொன்றிலிருந்து குடும்பஸ்தரின் சடலம் நேற்றையதினம்(21) மீட்கப்பட்டுள்ளது.
வவுனியா தோணிக்கல் ஆலடி வீதியில் பலசரக்கு வியாபாரம் செய்து வரும் 43வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குடும்பஸ்தர் தனது மனைவி பிள்ளைகளை பிரிந்து தனது தாயாருடன் வசித்து வந்துள்ளார்.
இந் நிலையில் அவர் குறித்த வர்த்தக நிலையத்திலேயே தங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது
இந்நிலையில் நேற்றைய தினம்(21) மாலை குடும்பஸ்தர் அதிக மதுபோதையில் இருந்ததாகவும் இரத்த வாந்தி எடுத்ததாகவும் அதன்போது அயலவர்கள் அவசர அம்புலன்ஸ் சேவைக்கு தொடர்பு கொண்டு அம்புலன்ஸ் வருகை தந்திருந்தும் மருத்துவமனைக்கு செல்ல மறுத்துவிட்டார் என்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.
வவுனியாவில் வர்த்தக நிலையமொன்றுக்குள் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர். வவுனியாவில் வர்த்தக நிலையமொன்றிலிருந்து குடும்பஸ்தரின் சடலம் நேற்றையதினம்(21) மீட்கப்பட்டுள்ளது.வவுனியா தோணிக்கல் ஆலடி வீதியில் பலசரக்கு வியாபாரம் செய்து வரும் 43வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.குடும்பஸ்தர் தனது மனைவி பிள்ளைகளை பிரிந்து தனது தாயாருடன் வசித்து வந்துள்ளார்.இந் நிலையில் அவர் குறித்த வர்த்தக நிலையத்திலேயே தங்கி இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறதுஇந்நிலையில் நேற்றைய தினம்(21) மாலை குடும்பஸ்தர் அதிக மதுபோதையில் இருந்ததாகவும் இரத்த வாந்தி எடுத்ததாகவும் அதன்போது அயலவர்கள் அவசர அம்புலன்ஸ் சேவைக்கு தொடர்பு கொண்டு அம்புலன்ஸ் வருகை தந்திருந்தும் மருத்துவமனைக்கு செல்ல மறுத்துவிட்டார் என்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர்.