• Apr 03 2025

தகவல் வழங்கினால் பணப்பரிசு..! பொதுமக்களுக்கு பொலிஸாரின் அறிவிப்பு

Chithra / Mar 22nd 2024, 9:12 am
image

 

நாட்டில் திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள் குறித்து தகவல் வழங்குபவர்களுக்கு பணப்பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா இதனை தெரிவித்துள்ளார்.

போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள் குறித்து தகவல் வழங்குபவர்களுக்கு 05 இலட்சம் ரூபா வரை பரிசாக வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், குற்றச்செயல்கள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு பல சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் வழங்கினால் பணப்பரிசு. பொதுமக்களுக்கு பொலிஸாரின் அறிவிப்பு  நாட்டில் திட்டமிட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள் குறித்து தகவல் வழங்குபவர்களுக்கு பணப்பரிசு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி நிஹால் தல்துவா இதனை தெரிவித்துள்ளார்.போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் பயன்படுத்திய துப்பாக்கிகள் குறித்து தகவல் வழங்குபவர்களுக்கு 05 இலட்சம் ரூபா வரை பரிசாக வழங்குமாறு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.மேலும், குற்றச்செயல்கள் தொடர்பில் தகவல் வழங்குபவர்களுக்கு பல சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement