கடந்த 2022 ஆம் ஆண்டு மாத்திரம் நாடளாவிய ரீதியில் 19,457 புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களில் 28 சதவீதமானோர் மார்பகப்புற்று நோயாளர்களாவர். அந்தவகையில் நாளாந்தம் சுமார் 15 மார்பகப்புற்று நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்படுவதோடு துரதிஷ்டவசமாக நாளாந்தம் 3 பேர் உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஸ்ரீனி அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அனுஷ்டிக்கப்பட உள்ள மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இன்று சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
பாரிய சுகாதார பிரச்சினையாக உள்ள மார்பகப்புற்று நோய் தொடர்பில் ஒக்டோபர் மாதம் முழுவதும் பரவலான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
மார்பகப்புற்றுநோய் தொடர்பில் வீன் அச்சம் கொள்ளத் தேவையில்லை, நோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து உரிய சிகிச்சைகளை பெறுவதன் மூலம் நோயை முழுமையாக குணப்படுத்தலாம்.
எனினும் நாட்டில் நோய் நிலைமையின் பிந்திய நிலையிலேயே மார்பக புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்படுவது வருத்தத்துக்குரிய விடயமாக உள்ளது.
இறுதியாக கிடைக்கப்பெற்ற 2022 ஆம் ஆண்டுக்கான சுகாதார தரவுகளுக்கமைய நாடளாவிய ரீதியில் 19,457 புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 28 சதவீதமானோர் அதாவது 5477 பேர் பெண் மார்பகப்புற்று நோயாளர்கள் என தெரியவந்துள்ளது.
நோயின் பிந்திய நிலையில் சிகிச்சையளிப்பது சிக்கலான விடயமாகும். இலங்கையில் வருடாந்தம் சுமார் 15,500 புற்றுநோயாளர்கள் மரணிக்கின்றனர்.
2022 ஆம் ஆண்டு மாத்திரம் 15245 பேர் அவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் அவ்வாறு மரணித்தவர்களில் 798 பேர் மார்பகப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர்.
நாடளாவிய ரீதியில் நாளாந்தம் 15 மார்பகப்புற்றுநோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்படுவதுடன், 3 பேர் மரணிப்பதாகவும் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.
இந்நிலையில் மார்பகப்புற்றுநோய் தொடர்பில் தெளிவூட்டுவதற்காக ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி எவலொக்சிட்டி மாலில் விசேட கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அன்றைய தினம் விசேட வைத்தியநிபுணர்களும் நோய் தொடர்பில் மேலதிக விழிப்புணர்வுகளை வழங்க உள்ளனர் என்றார்.
இலங்கையில் மார்பகப்புற்று நோயாளர்கள் தொடர்பில் விசேட வைத்திய நிபுணர் அதிர்ச்சித் தகவல் கடந்த 2022 ஆம் ஆண்டு மாத்திரம் நாடளாவிய ரீதியில் 19,457 புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் அவர்களில் 28 சதவீதமானோர் மார்பகப்புற்று நோயாளர்களாவர். அந்தவகையில் நாளாந்தம் சுமார் 15 மார்பகப்புற்று நோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்படுவதோடு துரதிஷ்டவசமாக நாளாந்தம் 3 பேர் உயிரிழப்பதாக தேசிய புற்றுநோய் கட்டுப்பாட்டு திட்டத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் ஸ்ரீனி அழகப்பெரும தெரிவித்துள்ளார்.எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அனுஷ்டிக்கப்பட உள்ள மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இன்று சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,பாரிய சுகாதார பிரச்சினையாக உள்ள மார்பகப்புற்று நோய் தொடர்பில் ஒக்டோபர் மாதம் முழுவதும் பரவலான விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. மார்பகப்புற்றுநோய் தொடர்பில் வீன் அச்சம் கொள்ளத் தேவையில்லை, நோயை ஆரம்ப நிலையில் கண்டறிந்து உரிய சிகிச்சைகளை பெறுவதன் மூலம் நோயை முழுமையாக குணப்படுத்தலாம். எனினும் நாட்டில் நோய் நிலைமையின் பிந்திய நிலையிலேயே மார்பக புற்றுநோயாளிகள் அடையாளம் காணப்படுவது வருத்தத்துக்குரிய விடயமாக உள்ளது.இறுதியாக கிடைக்கப்பெற்ற 2022 ஆம் ஆண்டுக்கான சுகாதார தரவுகளுக்கமைய நாடளாவிய ரீதியில் 19,457 புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 28 சதவீதமானோர் அதாவது 5477 பேர் பெண் மார்பகப்புற்று நோயாளர்கள் என தெரியவந்துள்ளது. நோயின் பிந்திய நிலையில் சிகிச்சையளிப்பது சிக்கலான விடயமாகும். இலங்கையில் வருடாந்தம் சுமார் 15,500 புற்றுநோயாளர்கள் மரணிக்கின்றனர். 2022 ஆம் ஆண்டு மாத்திரம் 15245 பேர் அவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் அவ்வாறு மரணித்தவர்களில் 798 பேர் மார்பகப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவர். நாடளாவிய ரீதியில் நாளாந்தம் 15 மார்பகப்புற்றுநோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்படுவதுடன், 3 பேர் மரணிப்பதாகவும் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்நிலையில் மார்பகப்புற்றுநோய் தொடர்பில் தெளிவூட்டுவதற்காக ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி எவலொக்சிட்டி மாலில் விசேட கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், அன்றைய தினம் விசேட வைத்தியநிபுணர்களும் நோய் தொடர்பில் மேலதிக விழிப்புணர்வுகளை வழங்க உள்ளனர் என்றார்.