புத்தளத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றும் 18 வேன்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
புத்தளத்தில் உள்ள பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் 32 வேன்கள் மற்றும் பஸ்களை பரிசோதனை செய்த புத்தளம் மோட்டார் வாகன பரிசோதகர், அவற்றில் 18 வேன்களுக்கு தடை உத்தரவுகளைப் பிறப்பிக்கவும், ஒரு வேனை சேவையிலிருந்து அகற்றவும் பொலிஸாருக்கு அறிவுறுத்தினார்.
புத்தளம் பொலிஸ் தலைமையக போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பிரசன்ன கடுகம்பொல, பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பஸ்கள் மற்றும் வேன்கள் என்பனவற்றை பரிசோதனை செய்ய நேற்று (23) நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
இதன்போது, புத்தளம் மாவட்ட மோட்டார் வாகன பரிசோதகர் எச்.எம்.ஆர். ஹேரத் தலைமையில் குறித்த பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பஸ்கள் மற்றும் வேன்களின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் முறையாக பரிசோதனை செய்யப்பட்டன.
இதில் இயந்திர குறைபாடுகள், டேஷ்போர்டுகளின் வலிமை, பிரேக்குகளின் செயல்பாடு மற்றும் விளக்குகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
புத்தளத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றும் 18 வேன்களுக்கு தற்காலிக தடை புத்தளத்தில் பாடசாலை மாணவர்களை ஏற்றும் 18 வேன்களுக்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. புத்தளத்தில் உள்ள பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் 32 வேன்கள் மற்றும் பஸ்களை பரிசோதனை செய்த புத்தளம் மோட்டார் வாகன பரிசோதகர், அவற்றில் 18 வேன்களுக்கு தடை உத்தரவுகளைப் பிறப்பிக்கவும், ஒரு வேனை சேவையிலிருந்து அகற்றவும் பொலிஸாருக்கு அறிவுறுத்தினார்.புத்தளம் பொலிஸ் தலைமையக போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பிரசன்ன கடுகம்பொல, பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பஸ்கள் மற்றும் வேன்கள் என்பனவற்றை பரிசோதனை செய்ய நேற்று (23) நடவடிக்கைகளை மேற்கொண்டார்.இதன்போது, புத்தளம் மாவட்ட மோட்டார் வாகன பரிசோதகர் எச்.எம்.ஆர். ஹேரத் தலைமையில் குறித்த பரிசோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பஸ்கள் மற்றும் வேன்களின் உட்புறம் மற்றும் வெளிப்புறம் முறையாக பரிசோதனை செய்யப்பட்டன.இதில் இயந்திர குறைபாடுகள், டேஷ்போர்டுகளின் வலிமை, பிரேக்குகளின் செயல்பாடு மற்றும் விளக்குகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.