• Sep 15 2025

தம்புள்ளையில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த குடும்பப் பெண்

Chithra / Sep 14th 2025, 8:07 am
image

மாத்தளை - தம்புள்ளை, தித்தவெல்கொல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.

தித்தவெல்கொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

இந்த சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இவர் திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் உறங்கியுள்ள நிலையில் அதிகாலையில் நீண்ட நேரமாகியும் எழும்பாமல் இருந்துள்ளார். 

இதனையடுத்து பெண்ணின் கணவர் அவரை வைத்தியசாலைக்கு கொண்டுசென்றபோது வைத்திய பரிசோதனையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.

இது தொடர்பில் தம்புள்ளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தம்புள்ளையில் சந்தேகத்துக்கிடமான முறையில் உயிரிழந்த குடும்பப் பெண் மாத்தளை - தம்புள்ளை, தித்தவெல்கொல்ல பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தம்புள்ளை பொலிஸார் தெரிவித்தனர்.தித்தவெல்கொல்ல பிரதேசத்தைச் சேர்ந்த 34 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்இந்த சம்பவம் நேற்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.இவர் திருமண நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காக நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் உறங்கியுள்ள நிலையில் அதிகாலையில் நீண்ட நேரமாகியும் எழும்பாமல் இருந்துள்ளார். இதனையடுத்து பெண்ணின் கணவர் அவரை வைத்தியசாலைக்கு கொண்டுசென்றபோது வைத்திய பரிசோதனையில் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரியவந்துள்ளது.இது தொடர்பில் தம்புள்ளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement