• Nov 07 2025

சொந்த நிதியில் 6000 அன்னாசிப் பயிர்களைப் பயிரிட்ட விவசாயி; வெற்றியளித்த முதல் முயற்சி

Chithra / Oct 15th 2025, 10:56 am
image

அலுத்தோயா, சிங்ககம கிராமத்தில் தனது சொந்த நிதியில் 6,000 அன்னாசிச் செடிகளைப் பயிரிட்டுள்ள விவசாயி, இன்னும் இரண்டு மாதங்களில் அறுவடை செய்யத் தயாராக இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். 

இதுவே அவர் அன்னாசிப் பயிரிடுவது முதலாவது முறையாகும்.

சிங்ககம கிராமத்தைச் சேர்ந்த ஏ.ஜி.திலகரத்ன பண்டார,  சுமார் ஆறு லட்சம் ரூபாய்   பணத்தைச் செலவு செய்து தனது காணியில் இந்தப் பயிர்செய்கையை மேற்கொண்டுள்ளார்.


பயிர்செய்கையின் ஒரு பகுதியாக, அவர் நீர்க் குழாய்களைப் பொருத்தி, வாரத்திற்கு இரண்டு முறை தவறாமல் நீர்ப்பாசனம் செய்து வருகிறார். 

தற்போதுள்ள பயிர்கள் நன்கு வளர்ந்து அறுவடைக்குத் தயாராக உள்ள நிலையில், இது அவரது வெற்றிகரமான முதல் முயற்சியாக அமைந்துள்ளது.

இந்தச் செய்கைக்கு அரசாங்கத்திடமிருந்தோ அல்லது வேறு நிறுவனங்களிடமிருந்தோ தனக்கு எந்தவிதமான உதவியும் கிடைக்கவில்லை என்றும், தனது சொந்த நிதியைக் கொண்டே இந்த முயற்சியைத் தொடங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், 

அரசாங்கமோ அல்லது ஏனைய நிறுவனங்களோ தனக்கு உதவி செய்தால், தற்போதுள்ளதை விடப் பல மடங்கு பெரிய அளவில் அன்னாசிப் பயிர்செய்கையைத் தொடர முடியும் என்றும், அதன் மூலம் உற்பத்தியை அதிகரித்து நாட்டிற்குப் பங்களிக்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

சொந்த நிதியில் 6000 அன்னாசிப் பயிர்களைப் பயிரிட்ட விவசாயி; வெற்றியளித்த முதல் முயற்சி அலுத்தோயா, சிங்ககம கிராமத்தில் தனது சொந்த நிதியில் 6,000 அன்னாசிச் செடிகளைப் பயிரிட்டுள்ள விவசாயி, இன்னும் இரண்டு மாதங்களில் அறுவடை செய்யத் தயாராக இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இதுவே அவர் அன்னாசிப் பயிரிடுவது முதலாவது முறையாகும்.சிங்ககம கிராமத்தைச் சேர்ந்த ஏ.ஜி.திலகரத்ன பண்டார,  சுமார் ஆறு லட்சம் ரூபாய்   பணத்தைச் செலவு செய்து தனது காணியில் இந்தப் பயிர்செய்கையை மேற்கொண்டுள்ளார்.பயிர்செய்கையின் ஒரு பகுதியாக, அவர் நீர்க் குழாய்களைப் பொருத்தி, வாரத்திற்கு இரண்டு முறை தவறாமல் நீர்ப்பாசனம் செய்து வருகிறார். தற்போதுள்ள பயிர்கள் நன்கு வளர்ந்து அறுவடைக்குத் தயாராக உள்ள நிலையில், இது அவரது வெற்றிகரமான முதல் முயற்சியாக அமைந்துள்ளது.இந்தச் செய்கைக்கு அரசாங்கத்திடமிருந்தோ அல்லது வேறு நிறுவனங்களிடமிருந்தோ தனக்கு எந்தவிதமான உதவியும் கிடைக்கவில்லை என்றும், தனது சொந்த நிதியைக் கொண்டே இந்த முயற்சியைத் தொடங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில், அரசாங்கமோ அல்லது ஏனைய நிறுவனங்களோ தனக்கு உதவி செய்தால், தற்போதுள்ளதை விடப் பல மடங்கு பெரிய அளவில் அன்னாசிப் பயிர்செய்கையைத் தொடர முடியும் என்றும், அதன் மூலம் உற்பத்தியை அதிகரித்து நாட்டிற்குப் பங்களிக்க முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement